கம்பராமாயணம் 927 · பால 14.41
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆடவர் ஆவி சோர - (தம்) கணவரின் உயிர் வருந்தித் தளரும்படி; அஞ்சனம் வாரி சோர - (தீட்டிய) மையுடன் கண்ணீர் பெருகுமாறு; ஊடலில் சிவந்த நாட்டத்து - புலவியால் செந்நிறம் அடைந்த கண்களையுடைய; உம்பர்தம் அரம்பை மாதர் - தேவர்களின் மனைவியர்; கோதை நின்றும் துறந்த - தம் முடிகளிலிருந்து கழற்றி எறிந்த; தோடு அவிழ் மந்தார மாலை - இதழ் விரிந்த மந்தார மாலைகள்; வாடல நறவு அறாது - வாடாதனவாகித் தேனும் நீங்காமல்; வயின் வயின் வயங்கும் - அந்தந்த இடங்களிலே விளங்கும்.
ஊடல் கொண்ட தேவ மாதர்தம் கணவர் வருந்துமாறு சிவந்த கண்களில் கண்ணீரைப் பெருக்கிக் கழற்றியெறிந்த மந்தார மாலைகள் அம் மலையின் பல இடங்களிலும் காணப்படும் என்பது. தெய்வ மாலையாதலின் வாடாமலும், நறவு அறாமலும் இருந்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So that their men's hearts failed, while tears streamed down with their collyrium,
- the heavenly nymphs of the gods, their eyes reddened from a lovers' quarrel,
- flung off from their hair garlands of open-petalled mandāra flowers,
- which lie shining here and there, unwilting, never losing their honey.
What the poem says
Here and there across the mountain lie garlands of mandāra, a flower of heaven. Celestial women tore them from their hair in lovers' quarrels with their husbands, weeping until their eye-black ran, while the husbands looked on in despair.
Because these are flowers of the gods, they never wilt and never lose their nectar.