கம்பராமாயணம் 928 · பால 14.42

Section பால காண்டம் / 14. வரைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மாந் தளிர் அனைய - மாந் தளிரைப் போன்ற; மேனிக் குறத்தியர் - உடல் நிறம் கொண்ட குறப் பெண்கள்; மாலை சூட்டி - மலர் மாலைகளை அணிவித்து; (பின்பு) கூந்தல் கமுகின் பாளை - கூந்தற் கமுகின் பாளைகளை; குழலினோடு ஒப்புக் காண்பார் - (தம்) கூந்தலோடு வைத்து ஒப்பிட்டுக் காண்பார்கள்; ஏந்து இழை அரம்பை மாதர் - அழகிய அணிகலன் பூண்ட தெய்வ மாதர்கள்; எரி மணிக் கடகம் வாங்கி - நெருப்புப் போல ஒளிவிடும் மணிக் கடகங்களைக் கழற்றி; காந்தள் போதில் பெய்து - காந்தள் மலர்களிலே அவற்றை யணிந்து; கைகளோடு ஒப்புக் காண்பார் - (தம்) கைகளோடு உவமை காண்பார்கள். குறத்தியர் கூந்தற் கமுகின் பாளைகளிலே மலர் மாலையையணிவித்து அவை தமது கூந்தலோடு ஒப்பாவதைக் கண்டனர். தெய்வ மகளிர் தம் கடகத்தை வாங்கிக் காந்தளிலேயணிந்து அம் மலர்தம் கைக்கு ஒப்பாவதைக் காண்பார் என்பது. மண்ணுலகத்தவரும், விண்ணுலகத்தவரும் மகிழ்வதற்கு அம் மலை இடனாயுள்ளது என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The hill women, whose bodies are like tender mango shoots, put garlands on
  2. the flower-sheaths of the lovely kūntal areca palm and compare them with their own tresses;
  3. the heavenly nymphs in fine jewels slip off their fire-bright gem bracelets,
  4. put them on lovely kāntaḷ blossoms, and compare them with their own hands.

What the poem says

Two playful comparisons on the mountain. The hill women hang flower garlands on the long, hair-like flower-sheaths of a palm called kūntal, "tresses", and hold them up against their own braided hair.

The heavenly women slip their bracelets onto the slender, finger-like kāntaḷ flowers and compare these with their own hands. The mountain gives pleasure to the people of earth and of heaven alike.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mān taḷir aṉaiya mēṉik kuṟattiyar mālai cūṭṭi
kūntal am kamukiṉ pāḷai kuḻaliṉōṭu oppuk kāṇpār;
ēntu iḻai arampai mātar eri maṇik kaṭakam vāṅki
kāntaḷ am pōtil peytu kaikaḷōṭu oppuk kāṇpār.