கம்பராமாயணம் 9405 · யுத்த 30.54
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஐய - ஐயனே! ஆகினும் - எங்கள் செயல் இப்படியாக விட்டாலும்; வேண்டினார்க்கு என - நம் உதவியை வேண்டி வந்தவர்களுக்காக; அமரின் சாகிலம் - போரில் ஈடுபட்டுச் சாகாதவர்களாய்; அஞ்சிப் பெயர்ந்த தன்மை - அரக்கர்களுக்கு அஞ்சி விலகி வந்து விட்ட தன்மை; பழி தரும் - நமக்குப் பழியைத் தரும் (மேலும்); நரகில் தள்ளும் - மறுமையிலே நரகத்தில் தள்ளி விடும்; ஏகுதும் மீள - (எனவே, பழியிலிருந்தும் நரகிலிருந்தும் தப்புவதற்காக) மீண்டும் போர்க்களம் போகிறோம்; இன்னும் இயம்புவது உளது - மேலும் சொல்லவேண்டிய ஒன்று இருக்கிறது; எய்தி - போர்க்களத்தை அடைந்து; மேகமே அனையான் கண் முன் - மேகம் போன்றவனாகிய இராமபிரானுக்கு முன்னே சென்று; எங்ஙனம் விழித்து நிற்றும் - எப்படி விழித்து நிற்கப் போகிறோம்?
ஆல் - அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Even so, sir! that we did not die in battle for those who sought our help,
- but turned away in fear, will bring us disgrace and thrust us into hell;
- we will go back. Yet there is still something to be said: when we arrive,
- how shall we stand and meet the eyes of the one who is like the rain cloud?"
What the poem says
Cāmpaṉ accepts Aṅkataṉ's rebuke. Running away in fear instead of dying in battle for those who asked for their help will bring shame in this life and hell in the next, so they will return to the field.
But one thing troubles him: how will they face Irāmaṉ, dark like a rain cloud, after deserting him?