கம்பராமாயணம் 9404 · யுத்த 30.53
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வலி இதன் மேலே - இத்தகைய வலிமைக்கு மேலே; பெற்ற வரத்தினர் - தேவர்களிடமிருந்து பெற்ற வரங்களையும் உடையவர்கள்; மாயம் வல்லார் - வலிமை வரம் ஆகியவற்றோடு மாயங்களிலும் வல்லவர்கள்; ஒலி கடல் மணலின் மிக்க கணக்கர் - ஒலிக்கின்ற கடலில் உள்ள மணலை விட மிகுந்த எண்ணிக்கை உடையவர்கள்; உள்ளம் நோக்கின் - இவர்களுடைய மனம் எத்தகையது என்று பார்த்தால்; கலியினும் கொடியர் - கலி புருஷனை விட கொடியவர்கள்; படைக்கலங்கற்ற கரத்தர் - போர்க் கருவிகளைக் கையாளுவதில் தேர்ச்சி பெற்ற கைகளை உடையவர்கள்; என்றால் - என்று இவ்வாறானால்; விண்ணவர் வெருவல் கண்டால் - இவர்களை நினைத்தும் பார்த்து தேவர்களே அஞ்சுவதை நோக்கினால்; மெலிகுவது அன்றி உண்டோ - எளியவர்களாகிய நாங்களெல்லாரும் தளர்வது தவிர வேறு வழி உண்டா?
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Over and above this strength, they hold boons they have won; they are masters of illusion;
- their number exceeds the sand of the roaring sea; if you look into their hearts,
- they are crueller than Kali; their hands are schooled in weapons; that being so,
- when we see even the gods in terror, what can we do but lose heart?"
What the poem says
Cāmpaṉ adds to the account. Besides their raw strength the demons have boons granted by the gods and skill in sorcery; they outnumber the sands of the sea; at heart they are more wicked than Kali, the spirit of the dark age; and they are expert with every weapon. When even the gods tremble at them, small creatures like the monkeys can only weaken.