கம்பராமாயணம் 9403 · யுத்த 30.52

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'மாலியைக் கண்டேன்; மற்றை மாலியவானைக் கண்டேன்;
கால நேமியையும் கண்டேன்; இரணியன்தனையும் கண்டேன்;
ஆலமா விடமும் கண்டேன்; மதுவினை அனுசனோடும்
வேலையைக் கலக்கக் கண்டேன்; இவர்க்கு உளமிடுக்கும் உண்டோ?

பொருள் · Meaning in Tamil

மாலியைக் கண்டேன் - மாலியைக் கண்டவன் நான்; பண்டை மாலியவானைக் கண்டேன் - பழங்காலத்து மாலியவானையும் பார்த்தவன் நான்; கால நேமியையும் கண்டேன் - கால நேமியையும் பார்த்திருக்கிறேன்; இரணியன் தனையும் கண்டேன் - இரணியனையும் பார்த்திருக்கிறேன்; ஆலமாவிடமும் கண்டேன் - ஆலகாலமாகிய பெரு நஞ்சையும் நான் பார்த்துள்ளேன்; மதுவினை அனுசனோடும் வேலையைக் கலக்கக் கண்டேன் - மது என்ற அரக்கனோடு அவன் தம்பியாகிய கைடபன் ஆகிய இருவரும் கடலைக் கலக்கியதையும் பார்த்திருக்கிறேன்; இவர்க்கு உள மிடுக்கும் உண்டோ - இங்கே தோன்றியுள்ள அரக்கர்களுக்கு உள்ள வலிமை நான் மேலே சொன்ன அரக்கர்களுக்கு உண்டோ? இல்லை; அவர்கள் அத்தனை பேரையும் விட இவர்கள் வலிமை மிக்கவர்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "I have seen Māli; I have seen Māliyavāṉ of old;
  2. I have seen Kālanēmi too; I have seen Iraṇiyaṉ;
  3. I have seen the great ālam poison; I have seen Matu with his younger brother
  4. churning up the sea; did any of them have the strength these have?"

What the poem says

Cāmpaṉ lists the great enemies of the gods he has witnessed in his long life: the demons Māli and Māliyavāṉ, Kālanēmi, Iraṇiyaṉ (Hiraṇyakaśipu), the ālakālam poison from the churning of the ocean, and Matu and his brother Kaiṭapaṉ (Madhu and Kaiṭabha) stirring up the cosmic waters. None of them had the might of the demons now facing Irāmaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'māliyaik kaṇṭēṉ; paṇṭai māliyavāṉaik kaṇṭēṉ;
kāla nēmiyaiyum kaṇṭēṉ; iraṇiyaṉtaṉaiyum kaṇṭēṉ;
āla mā viṭamum kaṇṭēṉ; matuviṉai aṉucaṉōṭum
vēlaiyaik kalakkak kaṇṭēṉ; ivarkku uḷa miṭukkum uṇṭō?