கம்பராமாயணம் 9402 · யுத்த 30.51

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தேவரும் அவுணர்தாமும் செருப் பண்டு செய்த காலை,
ஏவரே என்னால் காணப் பட்டிலர்? இருக்கை ஆன்ற
மூவகை உலகின் உள்ளார், இவர்துணை ஆற்றல் முற்றும்
பாவகர் உளரே? கூற்றும் இவருடன் பகைக்க வற்றோ?

பொருள் · Meaning in Tamil

தேவரும் அவுணர் தாமும் - தேவர்களும் அசுரர்களும், பண்டு செருச் செய்த காலம் - முன்பு போர் செய்த காலத்தில்; என்னால் காணப் பட்டிலர் ஏவரே - என்னால் காணப்படாதவர்கள் யார்? இருக்கை ஆன்ற மூவகை உலகின் உள்ளார் - நிலை பெறுதல் மிக்க மூன்று உலகிலும் வாழ்வோரில்; இவர் துணை ஆற்றல் முற்றும் பாவகர் உளரே - இந்த அரக்கர்கள் அளவுக்கு ஆற்றல் நிரம்பிய கொடியவர்கள் இருக்கிறார்களா?; கூற்றை அஞ்சினால் பழியும் உண்டோ - யமனுக்குப் பயந்தால் அந்த மரண அச்சம் காரணமாகப் பழி உண்டோ?

உளரே, உண்டோ - இரண்டும் எதிர்மறைப் பொருள் தரும் வினாக்கள். துணை - அளவு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "When the gods and the asuras fought their war long ago,
  2. who was there that I did not see? Among those who dwell in the three worlds
  3. of lasting abode, are there any evil ones with might as full as these?
  4. If one fears Death, is there any shame in it?"

What the poem says

Cāmpaṉ, who is immensely old, speaks from experience. He saw every warrior on both sides in the ancient war between the gods and the asuras. No wicked being in all three worlds has ever matched the strength of these demons.

And to be afraid of Death, he says, is no disgrace. Both questions in the verse expect the answer "no".

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tēvarum avuṇartāmum cerup paṇṭu ceyta kālam,
ēvarē eṉṉāl kāṇappaṭṭilar? irukkai āṉṟa
mūvakai ulakiṉ uḷḷār, ivar tuṇai āṟṟal muṟṟum
pāvakar uḷarē? kūṟṟai añciṉāl, paḻiyum uṇṭō?