கம்பராமாயணம் 9401 · யுத்த 30.50

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நாணத்தால் சிறிதுபோது நவில்கிலன் இருந்து, பின்னர்,
'தூண் ஒத்த திரள்தோள் வீர! தோன்றிய அரக்கர் தோற்றம்
காணத்தான், நிற்கத்தான், அக் கறை மிடற்றவற்கும் ஆமே?
கோணற் பூ உண்ணும் வாழ்க்கைக் குரங்கின்மேல் குற்றம் உண்டோ?

பொருள் · Meaning in Tamil

சிறிது போது நாணத்தால் நலங்கினன் இருந்து - சிறிது நேரம் சாம்பவான் வெட்கத்தால் கலங்கியிருந்து; பின்னர் - பிறகு (அங்கதனை நோக்கி); தூண் ஒத்த திரள் தோள் வீர! - தூண்போலத் திரண்ட தோள் கொண்ட வீரனே! தோன்றிய அரக்கர் தோற்றம் - பேரளவிலும் பெரிய உருவிலும் தோன்றியுள்ள அரக்கர்களின் அஞ்சத்தக்க காட்சியை; காணத்தான் நிற்கத்தான் - பார்க்கவோ பார்த்த பின் துணிவுடன் நிற்கவோ; அக்கறை மிடற்றவற்கும் ஆமே - நஞ்சுக் கறை கொண்ட அந்த நீலகண்டனாலும் முடிகிற காரியமா (முடியாதே) அப்படியிருக்க) பூ உண்ணும் வாழ்க்கை - பூக்களைத் தின்று வாழும் எளிய வாழ்க்கையுடைய; கோணற் குரங்கின் மேல் குற்றம் உண்டோ - கூனி நிற்பதை இயல்பாகவே கொண்ட குரங்குகளிடம் குற்றம் உண்டா? (இல்லை)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Abashed, he sat troubled for a little while, and then:
  2. "Hero with massive shoulders like pillars! the sight of the demons who have appeared,
  3. could even He of the stained throat bear to look at it or stand before it?
  4. Is there any fault in the bent-backed monkeys whose life is spent eating flowers?"

What the poem says

Cāmpaṉ sits silent a while, ashamed, then answers Aṅkataṉ. Not even Civaṉ, whose throat is stained by the poison, could look at this demon army or stand his ground before it.

How can the monkeys be blamed? They are humble, crooked-backed creatures who live on flowers.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nāṇattāl ciṟitu pōtu nalaṅkiṉaṉ iruntu, piṉṉar,
'tūṇ otta tiraḷ tōḷ vīra! tōṉṟiya arakkar tōṟṟam
kāṇattāṉ, niṟkattāṉ, ak kaṟai miṭaṟṟavaṟkum āmē?
kōṇaṟ pū uṇṇum vāḻkkaik kuraṅkiṉmēl kuṟṟam uṇṭō?