கம்பராமாயணம் 9400 · யுத்த 30.49

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'எத்தனை அரக்கரேனும், தருமம் ஆண்டு இல்லை அன்றே?
அத்தனை அறத்தை வெல்லும் பாவம் என்று அறிந்தது உண்டோ?
பித்தரைப் போல நீயும் இவரொடும் பெயர்ந்த தன்மை
ஒத்திலது 'என்னச் சொன்னான்; அவன் இவை உரைப்பது ஆனான்

பொருள் · Meaning in Tamil

எத்தனை அரக்கரேனும் - எதிர்த்து வந்துள்ள அரக்கர்கள் மிகவும் பலராக இருந்தாலும்; ஆண்டுத் தருமம் இல்லை அன்றே - அந்தப் பக்கத்தில் தருமம் இல்லையன்றோ? (எனவே அவர்களுக்கு வெற்றி கிடைக்காது) அத்தனை அறத்தை - மிகப் பெரிதாகிய தருமத்தை; பாவம் வெல்லும் என்று அறிந்தது உண்டோ - பாவம் வென்றுவிடும் என அனுபவத்தில் அறிந்தது உண்டா? (இல்லையே); பித்தரைப் போல - அறிவும் மனமும் குழம்பிய பயித்தியக்காரர்களைப் போல; நீயும் இவருடன் பெயர்ந்த தன்மை - நீ கூட இவர்களோடு நீங்கிவந்த பாங்கு; ஒத்திலது - உன் தகைமைக்கு ஏற்றதாகப் பொருந்தவில்லை; என்னச் சொன்னான் - என்று அங்கதன் கூறினான்; அவன் இவை உரைப்பதானான் - அதைக் கேட்ட சாம்பவான் இவற்றை (வரும் சொற்களைச் சொல்லலானான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "However many demons there are, there is no dharma on their side, is there?
  2. Has anyone ever known sin to conquer dharma so great?
  3. That you too should have fled with these like madmen
  4. is not fitting," he said; and Cāmpaṉ began to say these things.

What the poem says

Aṅkataṉ ends his reproach. However vast the demon army, righteousness is not on its side, and no one has ever seen wrongdoing defeat dharma. For a sage like Cāmpaṉ to run off with the others as if he had lost his mind is unworthy of him. Cāmpaṉ then begins his reply.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ettaṉai arakkarēṉum, tarumam āṇṭu illai aṉṟē?
attaṉai aṟattai vellum pāvam eṉṟu aṟintatu uṇṭō?
pittaraip pōla nīyum ivaruṭaṉ peyarnta taṉmai
ottilatu 'eṉṉac coṉṉāṉ; avaṉ ivai uraippatāṉāṉ