கம்பராமாயணம் 9399 · யுத்த 30.48

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மேலோய் ! - நீ எங்களிலே யாவரினும் மேம்பட்டவனே! தானவரோடும் மற்றைச் சக்கரத் தலைவனோடும் - அசுரர்களோடும் சக்கராயுதம் ஏந்திய திருமாலோடும் சேர்ந்து; வானவர் கடைய மாட்டா மறிகடல் - தேவர்கள் கடைய முடியாமல் தளர்ந்த போது அலைகள் மறித்துவிழும் அந்தக் கடலை; கடைந்த வாலி ஆனவன் - கடைந்த வாலி என்பவன்; அம்பு ஒன்றாலே - இராமன் செலுத்திய ஒரே அம்பினால்; உலந்தமை நீ அயர்த்தது என்? - இறந்ததை நீ மறந்தது ஏன்? மீன் அலர் வேலைபட்டது - மீன்கள் நிறைந்து விளங்குகின்ற கடல்பட்ட துன்பத்தை; உணர்ந்திலை போலும் - (நேரே கண்டிருந்தும் அதனில் விளங்கும் இராமபிரான் சிறப்பினை மனத்தில் பதியுமளவுக்கு) உணரவில்லை போலும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Vāli, who churned the rolling sea that the gods could not churn
  2. even with the Dānavas and with the Lord of the discus besides,
  3. died by a single arrow; why have you forgotten that?
  4. It seems you have not grasped what the fish-filled sea suffered, noble one!"

What the poem says

Aṅkataṉ appeals to what Cāmpaṉ has seen with his own eyes. His father Vāli was so mighty that he churned the Ocean of Milk when the gods, even helped by the asuras and Viṣṇu, could not; yet Irāmaṉ killed him with a single arrow.

Cāmpaṉ also saw how the ocean was forced to yield when Irāmaṉ threatened it before the causeway was built. Has he failed to take in what these events say about Irāmaṉ's power?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'tāṉavarōṭum, maṟṟaic cakkarat talaivaṉōṭum,
vāṉavar kaṭaiya māṭṭā maṟi kaṭal kaṭainta vāli
āṉavaṉ ampu oṉṟālē ulantamai ayarttatu eṉ nī
mīṉ, alar vēlai paṭṭatu uṇarntilaipōlum? mēlōy!