கம்பராமாயணம் 9424 · யுத்த 30.73
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
முனிவரே முதல்வர் ஆய அறத்துறை முற்றினோர்கள் - முனிவர்கள் முதலியோராகிய அறநெறியில் நிரம்பியவர்கள்; தனிமையும் - (இராமபிரானது) தனிமையையும்; அரக்கர் தானைப் பெருமையும் - இராக்கதர்களின் சேனைப் பெருக்கத்தையும்; தரிக்கலாதார் - பொறுக்க இயலாதவர்களாய்; பனிவரு கண்ணர் - நீர் சொரியும் கண்ணினராயும்; விம்மிப் பதைக்கின்ற நெஞ்சினர் - விம்மலுற்று நடுங்குகின்ற நெஞ்சினராயும், பாவத்து அனைவரும் தோற்க - பாவத்தின் சார்பிலுள்ள (அரக்கர்) எல்லாரும் தோற்றிடுக; அண்ணல் வெல்க - தலைவராகிய இராமபிரானே வெல்க; என்று ஆசி சொன்னார் - என வாழ்த்தினார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Those perfected in the way of dharma, with the sages at their head,
- unable to bear his being alone and the vastness of the demon army,
- with tears in their eyes and hearts sobbing and quaking, said in blessing,
- "May all those on the side of sin be defeated! May the noble one win!"
What the poem says
The sages and all who live by dharma cannot bear to see Irāmaṉ standing alone against so vast a demon host. With tears streaming and hearts pounding, they bless him: may every one of the wicked be defeated, and may Irāmaṉ be victorious.