கம்பராமாயணம் 95 · பால 3.14

Section பால காண்டம் / 3. நகரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நாம் நவில் உற்றது - நாம் இப்போது சிறப்பித்துச் சொல்லவந்தது; அகழி - (அம்மதிலின் புறத்தே அமைந்த) அகழியானது; அன்ன மாமதிலுக்கு - மேலே கூறப்பட்ட அத்தகைய பெரிய மதிலை; ஆழி மால்வரையை அலைகடல் சூழ்ந்து அன - பெரிய சக்கரமான கிரியை, அலைகள் பொங்கும் பெரும்புறக்கடல் சூழ்ந்திருப்பது போலச் சூழ்ந்து; பொன் விலை மகளிர் மனம் எனக் கீழ்போய் - விலை மாதர்களது மனத்தைப் போல மிகக் கீழே போய்; புன்கவி எனத்தெளிவின்றி - இழிந்த பாடல்களைப் போல தெளிவு இல்லாமல்; கன்னியர் அல்குல் தடம் என - கன்னியரின் அல்குலினிடம் போல; யார்க்கும் படிவரும் காப்பினது ஆகி - எவருக்கும் நெருங்க இயலாத காவலை உடையதாய்; நல் நெறி விலக்கும் பொறி என எறியும் கராத்தது - நல்ல நெறியில் செல்ல விடாமல் தடுக்கும் ஐம்பொறிகளைப் போன்றதாகிய எதிரிகளைத் தாக்கும் முதலைகளை உடையது.

இது முதல் ஏழு பாடல்கள் அகழியின் சிறப்பைக் கூறுவனவாய் உயர்ந்து வளைந்துள்ள மதிலுக்குச் சக்கரவாள மலையும், அகழிக்குப் பெரும்புறக் கடலும் உவமைகளாகும். அகழியின் ஆழம் எவர்க்கும் முற்றாக உணரமுடியாது; எதுபோல் எனின் விலைமகளிர் மனக்கருத்து அறியமுடியாதது போல். ஆழமாகத் தெளிவின்மையால் புல்லறிவாளர் கவியும் அகழிக்கு உவமையாயிற்று. பொறிகள் வயப்பட்ட மனம் நன்னெறியில் செல்லாது தீநெறியில் செல்லும்; அதுபோல விரைந்து பாய்வன முதலைகள் என்கிறார். கராம்: முதலை. படிவு: தோய்தல்.

(ஒப்பு) பிரபுலிங்க லீலை மாயையின் உற்பத்திக்கதி. பா. 14

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The moat that we now set out to praise rings that great wall as the wave-tossed ocean rings the great Cakravāḷa mountain;
  2. it goes as deep as the hearts of women who sell themselves for gold, and is as unclear as a worthless poem;
  3. like the secret parts of maidens, it is so guarded that none may enter it;
  4. and it is full of crocodiles that strike like the senses that turn one from the good path.

What the poem says

The poet turns from the wall to the moat around it, which takes up the next several verses. The wall is like the mythical ring of mountains at the edge of the world, and the moat like the outer ocean around it.

The comparisons are deliberately pointed. The moat is as deep and unknowable as the mind of a courtesan, and as murky as bad poetry. It is closed to everyone, and its crocodiles strike at intruders the way the five senses drag the mind from the right path.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṉa mā matilukku āḻi māl varaiyai alaikaṭal cūḻntaṉa akaḻi,
poṉ vilai makaḷir maṉam eṉak kīḻ pōy, puṉ kavi eṉat teḷivu iṉṟi,
kaṉṉiyar alkul taṭam eṉa yārkkum paṭivu aruṅ kāppiṉatu āki,
nal neṟi vilakkum poṟi eṉa eṟiyum karāttatu; navilaluṟṟatu nām.