கம்பராமாயணம் 954 · பால 14.68
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கண்ணுக்கு இனிது ஆகி - கண்களுக்கு அழகுடையதாகி, விளங்கிய காட்சியாலும் - தோன்றுகின்ற தோற்றப் பொலிவாலும்; எண்ணற்கு அரிது ஆக - எண்ணுவதற்கு அரிதாகுமாறு; இலங்கு சிரங்களாலும் - (ஆயிரக் கணக்கில்) விளங்கும் முடிகளாலும்; வண்ணம் - அழகு சேர்ந்ததாகிய; கொழுஞ் சந்தனச் சேதகம் - வளமான சந்தனக் குழம்பை; மார்பு அணிந்த - (தன்) மார்பில் அணிந்த; அண்ணல் கரியோன்தனை - பெருமையுள்ள திருமாலை; அவ் ஆசு இல் - அந்தக் களங்கம் இல்லாத; குன்றம் ஒத்தது - குன்றமானது ஒத்திருந்தது. கண்ணிற்கு இனிய காட்சியாலும் முடி ஆயிரத்தாலும் சந்தனம் மார்பில் அணிந்ததாலும் சந்திர சயில மலை திருமாலை ஒத்தது என்றார். மலைக்குச் சிரம்: சிகரம். மார்பு: நடுவிடம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- By its sight, so lovely to the eye,
- by its countless shining heads,
- and by the rich, coloured sandal paste it wore upon its chest,
- that flawless hill was like the great Dark One.
What the poem says
The Moon Mountain is compared to Viṣṇu, "the Dark One". Both are beautiful to look at. Both have countless heads: Viṣṇu in his cosmic form has a thousand, and the mountain has innumerable peaks. Both wear sandal paste on the chest, since the mountain's middle slopes are covered in sandalwood trees.