கம்பராமாயணம் 953 · பால 14.67

Section பால காண்டம் / 14. வரைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1திணி ஆர் சினை மா மரம் யாவையும், செக்கர் பாயத்,
தணியாத நறும் தளிர் ஈன்றன போன்று தாழ,
அணி ஆர் ஒளி வந்து நிரம்பலின், அங்கம் எங்கும்
மணியால் இயன்ற மலை ஒத்தது அம் மாசு இல் குன்றம்.

பொருள் · Meaning in Tamil

திணி ஆர் சினை - வலிமையான கிளைகள் கொண்ட; மா மரம் யாவையும் - பெரிய மரங்கள் யாவும்; செக்கர் பாய - செவ்வானத்தின் ஒளி வீசுவதால்; தணியாத நறுந்தளிர் - குறையாத சிறந்த தளிர்கள்; ஈன்றன போன்று தாழ - புதிதாகத் தழைத்தன போல விளங்க; அங்கம் எங்கும் - தன்னுடல் முழுவதும்; அணி ஆர் ஒளி - அழகிய அந்தச் செந்நிற ஒளி; வந்து நிரம்பலின் - வந்து நிறைவதால்; அம்மை இல் குன்றம் - குற்றமற்ற அந்த மலையானது; மணியால் இயன்ற - செந்நிறமுள்ள மணிகளால் இழைக்கப் பெற்றுள்ள; மலை ஒத்தது - மலையை ஒத்தது.

செவ்வானம் வீசப் பெறுவதால் செந்தளிர் புதிதாக உண்டாகப் பெற்றால் போன்ற பல மரங்கள் கவிந்த அந்தச் சந்திரசயிலம் செம்மணி கொண்டு இழைக்கப் பெற்றது போல் விளங்கிற்று என்பது - தற்குறிப்பேற்றவணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the sunset glow fell on all the great trees with dense branches,
  2. they drooped as if they had put out a wealth of fragrant red shoots;
  3. and as the lovely light came and filled every part of it,
  4. that flawless hill looked like a mountain made of rubies.

What the poem says

The red evening light falls on the trees of the mountain, and every tree seems to have suddenly put out a full crop of red young leaves. The whole flawless mountain, bathed in the glow, looks as though it were carved from rubies.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tiṇi ār ciṉai mā maram yāvaiyum, cekkar pāya,
taṇiyāta naṟun taḷir tantaṉa pōṉṟu tāḻa,
aṇi ār oḷi vantu nirampaliṉ, aṅkam eṅkum
maṇiyāl iyaṉṟa malai ottatu am mai il kuṉṟam.