கம்பராமாயணம் 952 · பால 14.66
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மஞ்சு ஆர் மலை - மேகம் தங்கிய அந்த மலையானது; வாரணம் ஒத்தது - யானையைப் போன்றுள்ளது; வானின் ஓடும் - வானத்தில் விரைந்து செல்லுகின்ற; வெம் சாயை உடை - வெப்பமான கதிர்களையுடைய கதிர் - சூரியன்; அதன் மீது பாயும் - அந்த யானைமேல் பாய்கின்ற; பஞ்சானனம் ஒத்தது - சிங்கத்தையொத்தது; செக்கர் வானம் - செவ்வானமானது; அது பாய ஊறும் - அச்சிங்கம் (யானைமேல்) பாய்ந்ததால் சுரக்கின்ற; செஞ்சோரி என - சிவந்த இரத்தம் போல; பொலிவுற்றது - விளங்கியது.
அந்திப் பொழுது உண்டாகச் சூரியன் மலையைச் சேரச் செவ்வானம் தோன்றியது. இதனை ஒரு யானை மீது சிங்கம் பாய்ந்ததால் எங்கும் இரத்தம் ஊறியதைப் போன்றது என்று வருணித்தார் - தன்மைத் தற்குறிப்பேற்றவணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The cloud-capped mountain was like an elephant; the sun with its fierce heat
- that runs across the sky and leaps down upon it there
- was like a lion; and as it sprang upon it,
- the red sky of evening shone like flowing red blood.
What the poem says
Evening falls on the Moon Mountain. The dark, cloud-capped mountain is an elephant, and the setting sun dropping onto it is a lion pouncing on its prey. The red glow of sunset spreading across the sky is the elephant's blood.
The lion is called pañcāṉaṉam in the Tamil, a Sanskrit word for lion.