கம்பராமாயணம் 951 · பால 14.65

Section பால காண்டம் / 14. வரைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இறக்கம் என்பதை எண்ணிலர், எண்ணுங்கால்
பிறக்கும் என்பதோர் பீழையது ஆதலால்;
துறக்கம் எய்திய தூயவர் ஏ என,
மறக்ககிற்றிலர் அன்னதன் மாண்பு எலாம்.

பொருள் · Meaning in Tamil

(அங்கே தங்கிய ஆடவரும், மகளிரும்); இறக்கம் என்பதை - (மலையை விட்டு) இறங்குவது என்பதை; எண்ணுங்கால் அது - நினைத்தால் அச் செயல்; ஒர் பீழை பிறக்கும் - பெருந் துன்பத்தை உண்டாக்கும்; என்பது ஆதலால் - என்ற காரணத்தால், எண்ணிலர் - (அதை மனத்தாலும்) நினையாதவரானார்கள் (அல்லாமலும் அவர்கள்); துறக்கம் எய்திய - விண்ணுலக இன்பத்தை நுகர்கின்ற; தூயவர் என - சான்றோர் போல; அன்னதன் மாண்பு எலாம் - அந்த மலையின் வளங்களையெல்லாம்; மறக்க கிற்றிலர் - மறக்க முடியாதவர் ஆனார்கள்.

துறக்கம் புக்க சான்றோர் அதன் சிறப்பை எண்ணுவதல்லாமல் வேறு எதனையும் மனத்தாலும் கருதாதவாறு போல, அந்த மலையைச் சேர்ந்த ஆடவரும் மகளிரும் அம் மலைவளத்தில் ஈடுபட்டிருந்தார்களேயன்றி வேறு எதையும் நினைக்கவில்லை என்பது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They would not think of coming down, for when they thought of it
  2. it gave rise to a pain;
  3. like the pure ones who have reached heaven,
  4. they could not forget all the glories of that place.

What the poem says

The very thought of leaving the mountain hurts, so the people refuse to think about it. Like righteous souls who have reached heaven and think of nothing but its joys, they are completely absorbed in the beauty of the place.

The word iṟakkum can mean "coming down" and also "dying". That gives a second reading: like souls in heaven, they no longer think of death and rebirth.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṟakkum eṉpatai eṇṇilar, eṇṇuṅkāl
piṟakkum eṉpatu or pīḻaiyatu ātalāl;
tuṟakkam eytiya tūyavarē eṉa,
maṟakkakiṟṟilar aṉṉataṉ māṇpu elām.