கம்பராமாயணம் 950 · பால 14.64
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பொங்கு தேன் நுகர் - பெருகும் தேனை உண்ணுகின்ற, பூ மிஞிறு ஆமென - பூக்களில் மொய்க்கும் வண்டுகள் போல; எங்கும் மாதரும் - எல்லா இடங்களிலும் மகளிரும்; மைந்தரும் ஈண்டி - ஆடவரும் நெருங்கி; அத் துங்க மால்வரை - ஓங்கிய பெரிய அம்மலையின்; சூழல்கள் யாவையும் - சாரல்களிலெல்லாம்; தங்கி - வசித்து; நீங்கலார் - (அம் மலையை விட்டு) பிரிந்து செல்ல மனம் இல்லாதவராய்; தாம் இனிது ஆடுவார் - (தாம்) இனிமையாக விளையாடினார்கள். வண்டுகள் மலர்களில் மொய்த்து அவற்றிலுள்ள தேனை உண்பது போல மைந்தரும் அம் மலைச் சாரல்களில் மொய்த்து ஆங்காங்குள்ள வளங்களை நுகர்ந்தனர் என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like bees on flowers drinking the brimming honey,
- women and men thronged everywhere, and over all the slopes
- of that lofty great mountain they stayed;
- they would not leave, and played there happily.
What the poem says
The people of the camp spread out over every slope of the Moon Mountain, crowding the groves the way bees crowd flowers to drink their honey. They take their pleasure in everything the mountain offers, and none of them can bring themselves to leave it.