கம்பராமாயணம் 949 · பால 14.63
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மேக மாலை - (அம் மலையில்) மேக வரிசைகள்; மேல் எலாம் மிடைந்தன - மேலிடம் முழுதும் நெருங்கினவாய், கீழ் எலாம் ஏக மாலை - கீழிடமெல்லாம் ஒரே மாலைத் திரளாக; கிடந்தது - கிடக்கும் (அம் மலை) (அதனால்); ஆகம் ஆலையம் ஆக - (தன்) திருமார்பைக் கோயிலாகக் கொண்ட; உளாள் பொலி - திருமகள் விளங்குகின்ற; வாக மால் உளார் - அழகிய திருமால் தங்கியிருக்கின்றார்; எனல் ஆகும் - என்று சொல்லுவதற்குப் பொருந்தும்.
அம் மலையின் மேற்புறத்தில் எல்லாம் மேகங்கள் வரிசை வரிசையாகப் படிந்துள்ளன. கீழ்புறத்தில் மலர்மாலைகள் கிடக்கின்றன; இவற்றால் அம் மலை பலரால் அருச்சிக்கப்பட்ட மலர்மாலையைப் பூண்ட கரிய திருமால் போல விளங்கும் என்பது. வாகு (அழகு) - வாக எனத் திரிந்தது - குறிப்புப் பெயரெச்சம். மேகம் சூழ்ந்த மலை திருமாலுக்கும் மாலைகள் திருமகளுக்கும் உவமிக்கப் பெற்றன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With her who dwells there shining, his chest her temple, one may say
- that lovely Māl, our lord, stands here;
- for strings of clouds crowded all over the top,
- and one great garland lay all over the slopes below.
What the poem says
Clouds cover the summit of the dark mountain in rows, and the lower slopes are draped in one continuous garland of flowers.
The whole mountain looks like Viṣṇu (Māl), dark as a rain cloud and covered in the flower garlands of his worshippers, with Tirumakaḷ, the goddess of fortune, living on his chest as if in a temple. The clouds stand for Viṣṇu's dark body and the garlands for the goddess.