கம்பராமாயணம் 957 · பால 14.71

Section பால காண்டம் / 14. வரைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மந்தாரம் உந்து மகரந்த மணம் குலாவும்
அம் தார் அரசர்க்கு அரசன்தன் அனீக வெள்ளம்,
நந்தாது ஒலிக்கும் நரலைப் பெருவேலை எல்லாம்
செந்தாமரை பூத்தது எனத், தீபம் எடுத்தது அன்று ஏ.

பொருள் · Meaning in Tamil

மந்தாரம் முந்து மகரந்தம் - மந்தார மலர்கள் சொரியும் தேனின்; மணம் குலாவும் - மணங் கமழப் பெற்ற; அம்தார் அரசர்க்கு அரசன் தன் - அழகிய மாலையணிந்த தசரதனின்; அனீக வெள்ளம் - சேனைக் கடலானது; நந்தாது ஒலிக்கும் - குறையாமல் ஒலிக்கும்; நரலை - பெரு முழக்கத்தையுடைய; பெரு வேலை எல்லாம் - பெருங் கடலின் இடம் முழுவதும்; செந்தாமரை பூத்து என - செந்தாமரை மலர் பூத்தது போல, தீபம் எடுத்த - விளக்குகளை ஏற்றி வைத்தது.

சேனை தங்கியிருந்த இடம் முழுவதும் விளக்குகள் ஏற்றப்பட்டதனால் அது கடல் முழுதும் செந்தாமரை பூத்தது போல விளங்கியது என்பது - தற்குறிப்பேற்ற அணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The flood of an army of the king of kings, whose lovely garland
  2. is fragrant with honey that the mandāra flowers pour out,
  3. lit its lamps, as if red lotuses had bloomed
  4. all over the great, roaring sea that never stops its sound.

What the poem says

Night has come. Throughout the vast camp of Tacarataṉ, king of kings, the lamps are lit. The army, endless and noisy as the ocean, now looks like a sea that has suddenly bloomed all over with red lotuses.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mantāram muntu makaranta maṇam kulāvum
am tār aracarkku aracaṉtaṉ aṉīka veḷḷam,
nantātu olikkum naralaip peru vēlai ellām
centāmarai pūtteṉa, tīpam eṭuttatu aṉṟē.