கம்பராமாயணம் 958 · பால 14.72
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வண்ணக் கதிர் ஈன்ற - அழகிய வெண்ணிறக் கதிர்களையுடைய; வெண்ணிலவு என - நிலாப் போன்ற; வாலுகத்தோடு - வெண் மணற் குவியலின் இடையே; ஒள் நித்திலம் - நல்ல நிறமுள்ள முத்துக்களை; ஈன்று ஒளிர் - பெற்று விளங்கும்; வால் வளை - வெண்மையான சங்கு; ஊர்வது ஒத்து - சஞ்சரிப்பது போன்று; தண் நற்கடலில் - குளிர்ந்த அழகிய கடலிலே; துளி சிந்து - நீர்த் திவலைகளை வீசுகின்ற, தரங்கம் நீங்கி - அலைகளிலிருந்து வெளிப்பட்டு; சுடர் வெள்மதி - ஒளி திகழும் வெண்ணிறச் சந்திரன்; மீன்கள் சூழ - நட்சத்திரங்கள் சூழ்ந்திருக்க; விண்ணில் வந்தது - வானத்திலே வந்து விளங்குவதாயிற்று.
கடலிலிருந்து வெளிப்பட்டு வானத்தில் நட்சத்திரங்கள் சூழப் பிரகாசிக்கும் சந்திரன் கடலிலிருந்து வெளிப்பட்டு வெண் மணலிலே முத்துக்கள் சூழ்ந்து விளங்க இடையே தோன்றும் வெண்சங்கை ஒத்தது என்பது - தற்குறிப்பேற்றவணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Leaving the spray-flinging waves of the cool, fine sea,
- the bright white moon came into the sky with the stars around it,
- like a white conch that has given birth to shining pearls
- crawling over sand white as the moonlight that pours out lovely rays.
What the poem says
The moon rises out of the sea into a sky full of stars. The poet compares it to a white conch shell creeping out of the waves onto beach sand as white as moonlight, with the shining pearls it has produced lying all around it. The stars are the pearls, and the sky is the white sand.