கம்பராமாயணம் 959 · பால 14.73
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மீன் நாறு வேலை - மீன்களின் புலால் நாற்றம் வீசும் கடலானது; ஒரு வெண்மதி - வெண்ணிறமுள்ள ஒரு சந்திரனை; ஈனும் வேலை - பெறுங் காலத்தில்; அதனை நோனாது - அந்தச் செயலைப் பொறுக்காமல்; அனீக வேலை - சேனைக் கடலானது; வான் நாடியரின் பொலி - வானுலக மகளிரைப் போல விளங்கும்; மாதர் முகங்கள் என்னும் - பெண்களுடைய முகங்கள் என்று சொல்லப்படுகின்ற; நுவலற்கு அருங் கோடி வெள்ளம் - அளவிட்டுச் சொல்ல முடியாத கோடி வெள்ளக் கணக்கான; ஆனா மதியங்கள் - கலை குறையாத முழுமையான சந்திரர்களை; மலர்ந்தது - பெற்றது.
கடல் ஒரு சந்திரனை ஈன்றது கண்டு பொறாமை கொண்டு சேனைக் கடலானது மாதர் முகங்கள் என்ற பல சந்திரர்களைப் பெற்றது என்பது - ஏதுத் தற்குறிப்பேற்றவணி. சேனைக் கடலுக்கு மீனையுடைய கடலை விட மேன்மை தோன்றுவதற்காக வேறுபாடு கூறியது - வேற்றுமையணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When the fish-smelling sea gave birth to a single white moon,
- unable to bear it, the sea of the army
- blossomed with countless crores of floods of unwaning moons:
- the faces of women as lovely as the women of heaven.
What the poem says
When the salt sea, smelling of fish, gives birth to its one moon, the "sea" of the army is jealous. It answers by producing countless full moons of its own: the faces of its women, as lovely as goddesses.
The poet invents a motive, jealousy, for something that simply happens, and he makes the army's sea superior to the real one. It has no smell of fish, and its moons never wane.