கம்பராமாயணம் 960 · பால 14.74
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கண்ணுளர் - கூத்தர் இயைந்த; ஆடல்தோறும் - ஆடு களங்களில் எல்லாம்; மண்ணும் முழவு - மார்ச்சனை அமைந்த மத்தளத்தின்; இன் ஒலி - இனிய ஓசையும்; மங்கையர் - ஆடலுக்கு இசைய பாடல் பாடும் மங்கையர்தம்; பாடல் ஓதை - கலத்தோடு (இசைக் கருவிகள்) பொருந்த அமைந்த கண்டத்து (மிடற்றுப்) பாடல் ஓசையும்; பண்ணும் - சுருதி சுத்தமாக அமைய வேண்டி முடுக்கி அமைக்கப் பட்ட; நரம்பின் - நரம்புக் கருவிகளில்; பகையா இயல் ஓதை - பகை நரம்பில் விரல் மறந்தும் பதியாவாறு அமைய எழும் ஓசையும்; பாணி - தாளம் ஒத்து அமைந்த ஓசையும்; கண் - தொளைகள்; உடைவேய் - நன்கு அமைக்கப் பெற்ற புல்லாங்குழல்களின் ஒலியும் ஆகிய இவை எல்லாம்; விண்ணும் மருளும்படி - தேவலோகத்தவரும் கேட்டு, கண்டு மருளும்படி; விம்மி - மிக்கு; எழுந்த - எழுந்தன.
தேவசாதியர் தம்முள் ஒரு வகையர் கின்னரர். இவர்கள் யாழ்த்திறம் வல்லவர். தேவர்கள் ஆடல், பாடல், மகளிர் நலம் நுகர்தல் இவற்றில் மிக்க ஆர்வத்தினர். அத்தகையரே அயோத்தி மக்கள் தம் ஆடல், பாடல் காண கேட்க நேரின் மருள்வர் என்பதாம். மார்ச்சனை: முழவிற்கு இடப்படும் 'ரவை' - இயைந்து பாடுங்கால் மிடற்றொலி எது? கருவி ஒலி எது? எனப் பிரிந்து அறிதல் எஃகுச் செவியர்க்கும் எளிதன்றாம். நரம்புக் கருவிகளை இயக்கு முறைகள் வார்தல், வடித்தல் முதலிய எண்வகை என்ப (சிலம்பு).
ஆங்கிலம் · English translationAI
Translation
- The sound of the tuned drums, the sound of the women's singing,
- the sound of the beat, kept in measure with tuned strings that never strike a discordant note,
- and the music of the bamboo flutes with their holes: at every dance of the performers
- these swelled and rose so that even heaven was bewildered.
What the poem says
Music and dance fill the camp at night. There are drums whose heads have been properly tuned with paste, women singing in perfect blend with the instruments, well-tuned strings played without a wrong note, the beat of the cymbals and the sound of flutes.
The performance is so fine that even the gods, who love dance, song and beauty, would be amazed by it. The voices and instruments blend so closely that even a sharp ear could hardly tell them apart.