கம்பராமாயணம் 961 · பால 14.75

Section பால காண்டம் / 14. வரைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மணியின் அணி - இரத்தின ஆபரணங்களை மார்பினின்றும்; நீக்கி - அகற்றி அவற்றினும் நொய்யது ஆன; வயங்கு ஒளி முத்தம் - விளங்குகின்ற ஒளி உடைய முத்து மாலையை (ஒருகாழ் முத்தம் - ஒற்றைவடம்); வாங்கி - தோழியரிடம் பெற்று; அணியும் - அணி கின்ற; அகில் ஆவி புலர்த்தும் - தமது குழற்காட்டை அகிற்புகையால் புலருமாறு செய்யும் (என்பதால் இவர்கள் மாலைக் குளியர் என்றாயிற்று); நல்லார் - அவர்கள் (அம்மகளிர்); தணியும் மது மல்லிகைத் தாமம் - மென்மையான நறுமணம் வீசுகின்ற மல்லிகை மாலையை; வெறுத்து - வெறுப்புற்றுக் களைந்து; வாசம் திணியும் - நறுமணம் மிக்க; இதழ்ப் பித்திகை கத்திகை - இதழ்களை உடைய கருமுகை மலர் மாலையை; சேர்த்து வாரும் - அணிவாரும் (ஆயினர்).

இரவிற்கோர் கோலம் கொடி இடையார் தாம் கொள்வர் என்பதால் கல் இழைத்துச் செய்த அணிகலன்களை நீக்கி ஒற்றை வட முத்து மாலை அணிந்தனர் என்க. மாலையில் நீராடிப் புறந்தூய்மை மேவினர். கூந்தற்குப் புகையூட்டிப் பொலிந்தனர் இரவை உவகையுடன் எதிர்நோக்கினர் என்பதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Taking off their gem ornaments and putting on instead shining pearls,
  2. women with such breasts, lovely ones who dry their hair in the smoke of aloe wood,
  3. tired of the jasmine wreaths whose sweet scent was fading,
  4. put on garlands of pittikai flowers with petals thick with fragrance.

What the poem says

The women dress for the night. They take off their heavy gem jewellery and put on a single strand of pearls. They have bathed in the evening and dry their hair over smoke from aloe wood to scent it.

They throw away the jasmine garlands whose scent has faded and put on wreaths of strongly fragrant pittikai blossoms, a kind of jasmine. They are getting ready for an evening of love.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṇiyiṉ aṇi nīkki, vayaṅku oḷi muttam vāṅki
aṇiyum mulaiyār, akil āvi pularttum nallār,
taṇiyum matu mallikait tāmam veṟuttu, vācam
tiṇiyum itaḻp pittikaik kattikai cērttuvārum.