கம்பராமாயணம் 9581 · யுத்த 30.230
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நினைந்தன முடித்தோம் என்று - நாம் எண்ணியவை எண்ணியபடியே முடித்துவிட்டோம் என்று; வானவர் துயரம் நீத்தார் - தேவர்கள் கவலையை ஒழித்தார்கள்; புனைந்தனென் வாகை என்னா - (வெற்றி பெற்று) வாகை மாலை அணிந்தேன் என்று; இந்திரன் உவகை பூத்தான் - இந்திரன் மகிழ்ச்சியால் மலர்ந்தான்; வனைந்தன அல்லா வேதம் - எவராலும் செய்யப்படாதனவாகிய வேதங்கள்; வாழ்வு பெற்று உயர்ந்த - உயிர் வாழ்வைப் பெற்று உயர்ந்தன.
மானிடர் எவராலும் செய்யப்படாதவை வேதங்கள்; 'எழுதாக் கிளவி' என்பர். அதனை 'வனைந்தன அல்லா வேதம்' என்றார். மாதோ: அசை
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'We have accomplished what we planned', and the gods put away their grief;
- 'I have put on the garland of victory', and Intiraṉ blossomed with joy;
- the Vedas, which no one fashioned, gained new life and rose high;
- and Ananta too, raising his heads, sighed with relief, his sorrow ended.
What the poem says
The demon reserve army has been destroyed, and the universe rejoices. The gods let go of their grief because their purpose has been fulfilled. Indra feels as though he himself has put on the victor's garland.
The Vedas, said to be made by no one and handed down unwritten, come alive again. Ananta, the cosmic serpent who holds up the earth on his heads, lifts them and breathes a sigh of relief now that the burden is lighter.