கம்பராமாயணம் 9582 · யுத்த 30.231

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தாய் - (சிறிய) தாயாகிய கைகேயி; 'படைத்துடைய செல்வம் ஈக' - உனக்கு உரியதாக வந்த செல்வத்தைக் கொடுத்துவிடு; என - என்று சொல்ல; தம்பிக்கு ஈந்து - தம்பியாகிய பரதனுக்குத் தந்துவிட்டு; வேய் படைத்துடைய கானம் - மூங்கில்கள் வளர்ந்துள்ள காட்டுக்கு; விண்ணவர் தவத்தின் மேவி - தேவர்கள் செய்த தவத்தால் வந்தடைந்து; தோய் படைத்தொழிலால் - ஈடுபாடு கொண்ட படைக்கலத் தொழிலால்; யார்க்கும் துயர்துடைத்தானை நோக்கி - எல்லாருடைய துயரத்தையும் போக்கியவனைப் பார்த்து; வாய் படைத்துடையார் எல்லாம் - வாய் படைத்தவர்கள் எல்லாரும்; வாழ்த்தினர் வணக்கம் செய்தார் - வாழ்த்தி வணங்கினர்.

வாய் பெற்றார் பெரும் பயன் அடைவது துயர் துடைத்த இராமனை வாழ்த்தலே என்ற கருத்தில் 'வாய் படைத்துடையார் எல்லாம் வாழ்த்தினார்' என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When his mother said 'Give up the wealth that was yours', he gave it to his brother,
  2. and through the penance of the gods came to the forest thick with bamboo;
  3. on him who by his deeds of arms wiped away the sorrow of all,
  4. all who had mouths gazed, and blessed him, and bowed down.

What the poem says

The poet looks back over Irāmaṉ's story. When his stepmother Kaikēyi demanded that he give up the kingdom that was rightfully his, he handed it to his brother Paratan without complaint.

He went into the bamboo forest, which the poet says came about through the penance of the gods, who needed him there. Now his feats of arms have removed the suffering of all. Every being with a mouth blesses him and bows, since praising such a saviour is the best use a mouth can be put to.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tāy, 'paṭaittuṭaiya celvam īka 'eṉa, tampikku īntu,
vēy paṭaittuṭaiya kāṉam viṇṇavar tavattiṉ mēvi,
tōy paṭait toḻilāl yārkkum tuyar tuṭaittāṉai nōkki,
vāy paṭaittuṭaiyār ellām vāḻttiṉār, vaṇakkam ceytār