கம்பராமாயணம் 9583 · யுத்த 30.232
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தீ மொய்த்த அனைய செங்கண் அரக்கரை - தீச் செறிந்தது போன்ற சிவந்த கண்கள் கொண்ட அரக்கர்களை; முழுதும் சிந்தி - முற்றாக அழித்து; பூ மொய்த்த கரத்தர் ஆகி - பூ நிறைந்த கைகள் உடையவராய்; விண்ணவர் போற்ற நின்றான் - தேவர்கள் போற்றும் படியாக நின்ற இராமபிரான்; பேய் மொய்த்து - பேய்கள் நிரம்பக் கூடியும்; நரிகள் ஈண்டி - நரிகள் நிறையக் கூடியும்; பெரும் பிணம் பிறங்கித் தோன்றும் - ஏராளமான பிணங்கள் விளங்கத் தோன்றுகின்ற; ஈமத்துள் - சுடுகாட்டில்; தமியன் நின்ற - தனியனாக நின்ற; கறைமிடற்று இறைவன் ஒத்தான் - கறையைக் கழுத்திலே கொண்ட சிவபிரானைப் போல் இருந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Having wholly scattered the red-eyed demons, eyes like gathered fire,
- he stood, his hands full of flowers, as the gods praised him;
- he was like the Lord with the stained throat who stands alone
- in the burning-ground crowded with ghouls, thronged by jackals, piled high with corpses.
What the poem says
After wiping out the fire-eyed demons, Irāmaṉ stands among the dead with his hands full of the flowers the gods have showered on him while they sing his praises.
The poet compares him to Śiva, the Lord whose throat is stained dark from swallowing the world-destroying poison. Śiva is said to stand alone and dance in the cremation ground, among ghouls, jackals and heaps of corpses.