கம்பராமாயணம் 9584 · யுத்த 30.233
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அண்டம் மாக் களமும் - இந்த அண்டமே பெரிய களமாகவும்; வீந்த அரக்கரே உயிரும் ஆக - வீழ்ந்து விட்ட அரக்கர்களை உயிர்க் கூட்டங்களாகவும் ஆக; கொண்டது ஓர் உருவம் தன்னால் - மேற்கொண்ட ஒப்பற்ற உருவத்தால்; இறுதி நாள் வந்து கூட மண்டும் நாள் - அழிவுக்காலம் வந்து சேர வரும் கடைநாளிலே; மறித்தும் காட்ட - திரும்பவும் படைத்துக் காட்டுவதற்காகவே; மன்னுயிர் அனைத்தும் வாரி உண்டவன் - நிலைபெற்ற உயிர்கள் எல்லாவற்றையும் ஒன்றாக எடுத்து உண்டவன்; தானே ஆன - தானேயாகிய; தன் ஒரு மூர்த்தி ஒத்தான் - தன் ஒப்பற்ற வடிவத்தை நிகர்த்து விளங்கினான்.
மண்டுதல் - நெருங்குதல். விழுங்கப்பட்ட உயிர்கள் மீண்டும் வரும் என்பதைப் புலப்படுத்தவே மன் (நிலைபெற்ற) உயிர் என்றார். விழுங்குவது அழிப்பதற்கு அன்று, மீண்டும் படைப்பதற்கு என்பதை 'மறித்தும் காட்ட உண்டவன்' என்ற தொடரால் புலப்படுத்தினார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With the universe as the great battlefield and the fallen demons as all its lives,
- by the one form he had taken, he was like that peerless form of his,
- which, when the last day comes upon the world, gathers in
- and swallows all enduring lives, to bring them forth again.
What the poem says
Here the battlefield is the whole universe and the slain demons stand for all living beings. Irāmaṉ, standing over them, resembles his own cosmic form as Viṣṇu.
At the end of an age that form swallows every creature into itself, not to destroy them but to keep them and bring them forth again in a new creation. The commentary notes that the word for 'enduring' lives hints that what is swallowed will return.