கம்பராமாயணம் 9608 · யுத்த 31.21

Section யுத்த காண்டம் / 31. வேல் ஏற்றப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'கடவுள் மாப்படை தொடுக்கின் மற்று அவை முற்றும் கடக்க
விடவும் ஆற்றவும் வல்லன் எல்லாரையும் வெல்லும்,
தடவும் ஆற்றலைக் கூற்றையும்; தமையனைப் போலச்
சுடவும் ஆற்றும் எவ் உலகையும்; எவனுக்கும் தோலான்.

பொருள் · Meaning in Tamil

கடவுள் மாப்படை தொடுக்கின் - பெரிய தெய்வ அம்புகளைத் தொடுத்தால்; மற்று அவை முற்றும் கடக்கவிடவும் ஆற்றவும் வல்லனேல் - அவ்வம்புகள் எல்லாவற்றையும் வெல்லவும் தாங்கவும் வலிமை யுடையவன் ஆனால்; யாரையும் வெல்லும் - எல்லாரையும் வெல்லுவான்; கூற்றையும் ஆற்றலைத் தடவும் - கூற்றுவனையும், வலிமையை ஆராய்ந்து பார்க்கும்; தமையனைப் போல - இராமனைப் போல்; எவ்வுலகையும் சுடவும் ஆற்றும் - எல்லா உலகங்களையும் சுட்டெரிக்கவும் முடியும்; எவனுக்கும் தோலான் - யார்க்கும் தோற்கமாட்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'If I loose great divine weapons, and he is able to overcome
  2. and withstand them all, he will defeat anyone,
  3. he will test the might even of Death; like his elder brother
  4. he can burn any world; he will yield to no one.'

What the poem says

Irāvaṇaṉ weighs his next move. If he uses the great divine weapons and Ilakkuvaṉ can survive and defeat them all, then this warrior can defeat anyone and could even take on Death.

Like his elder brother Irāmaṉ, he would then be able to burn up any world and would never be beaten by anyone. So Irāvaṇaṉ looks for another kind of weapon.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'kaṭavuḷ māp paṭai toṭukkiṉ maṟṟu avai muṟṟum kaṭakka
viṭavum āṟṟavum vallaṉēl yāraiyum vellum,
taṭavum āṟṟalaik kūṟṟaiyum; tamaiyaṉaip pōlac
cuṭavum āṟṟum ev ulakaiyum; evaṉukkum tōlāṉ.