கம்பராமாயணம் 9661 · யுத்த 32.25
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நெடும் படை வாள் நாஞ்சில் உழுநிணச் சேற்றின் - நீண்டவாளாம் கலப்பையாக உழுத கொழுப்பாகிய சேறுள்ளதாலும்; உதிரநீர் நிறைந்த காப்பின் - இரத்தமாம் நீர்நிறைந்த தேக்கமுள்ளதாலும்; கடும்பகடு படி கிடந்த கரும்பரம்பின் - (விரைந்து செல்லும் எருமைகளோடு தரையில் கிடந்த பரம்பு அடிக்கும் பலகை கொண்டுள்ளது போல) விரைந்து செல்லும் யானைப்பகடு படிந்த கரிய பெரும்பரப்பையுள்ளதாலும்; இன மள்ளர் பரந்த கையில் - (இரைமாத்த உழவர் பரவியுள்ள மக்கள் போல்) இனமொத்த வீரர் பரவிய பக்கங்கள் உள்ளதாலும்; படுங்கமல மலர் நாறும் முடிபரந்த பெருங்கிடக்கைப் பரந்த - (களையுள்ள தாமரை மலரோடு நாற்று முடிகள் கிடந்த பெரிய களங்கள் போல) தலைமாலையாகத் தாமரை சூடியதால் மணம் வீசும் முடிமகுடங்கள் கிடக்கும் பெரிய கிடக்கைகள் உள்ளமையாலும்; பண்ணை - (வயல்) வீரரின் பரந்த கூட்டம் உள்ள; தடம்பணையின் நறும்பழனம் தழுவியதே - எனப் பொலிவும் தகையும் காணீர் பெரிய மருதநிலம் பரப்பினை உடைய (போர்க்களம்) நறுமணம் வீசும் வயல்; எனப் பொலியும் தகையும் காண்மின் - எனத்தோன்றும் தன்மையையும் பாருங்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'With mire of fat ploughed by the ploughs of long swords, with dams brimming with blood-water,
- with dark harrowed stretches where fierce bulls lay sunk, with sides where hosts of warriors are spread,
- with great beds strewn with crowns fragrant with lotus flowers, a spreading estate,
- see how it shines, as if it had embraced the fragrant paddy fields of a broad farmland.'
What the poem says
Now the battlefield is described as a farm of rich paddy fields. The long swords are the ploughs that have turned up a mud of fat, and pools of blood are the water held in the fields.
The fallen elephants lie like the heavy boards used to level a field. Crowds of warriors are like the labourers, and the scattered crowns, still fragrant from their lotus garlands, are like bundles of seedlings waiting to be planted.