கம்பராமாயணம் 9662 · யுத்த 32.26
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வெளில் தீர்த்த வரைபுரையும் - வெற்றிடமில்லாத மலையை ஒத்த; மிடல் அரக்கர் உடல் விழவும் - வலிமை மிக்க அரக்கரின் உடல்கள் கீழே விழவும்; வீரன் வில்லின் ஒளிறு ஈர்த்த - இராமன் வில்லின் ஒளிவீசும் காதளவு இழுக்கப்பெற்ற; முழுநெடு நாண் உரும் ஏறு பலபடவும் - முழுமையும் நீட்சியுமுடைய நாண் ஒலி இடிகள் பல வலியற்று வீழவும்; உலகம் கீண்டு நளில் தீர்த்த நாகபுரம் புக்கு - உலகைக் கிழித்துச் செறிவில்லாத தூய நாகருலகில் புகுந்து; இழிந்த பகழிவழி நதியின் ஓடி - இறங்கிய அம்பு சென்ற வழியில் ஆறுபோல் ஓடி; களிறு ஈர்த்துப் புகமண்டும் - யானைகளை இழுத்துக் கொண்டு நாக உலகிற்கு புக நெருங்கும்; கடுங் குருதித் தடஞ்சுழிகள் - வேகத்துடன் வரும் இரத்தத்தின் பெரிய சுழிகளை; காண்மின் காண்மின் - பாருங்கள் பாருங்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'As the bodies of the mighty demons, like mountains with no empty space, fell, and as the hero's bow
- with its gleaming full long string drawn back loosed many thunderbolts, tearing the world,
- entering the city of the Nāgas, freed of all crowding, running like a river down the path the arrows went,
- see the great whirlpools of fierce blood that rush in, dragging elephants along! see!'
What the poem says
Irāmaṉ's arrows struck with the force of thunderbolts. They went through the mountainous bodies of the demons and tore through the earth down into Nāgalōkam, the serpents' underworld.
The blood followed the channels the arrows made and poured down into the underworld like rivers. It swirls in great whirlpools as it goes, dragging the bodies of elephants down with it.