கம்பராமாயணம் 9663 · யுத்த 32.27

Section யுத்த காண்டம் / 32. வானரர் களம் காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"கைத்தலமும், காத்திரமும், கருங்கழுத்தும் நெடும்புயமும், உரமும், கண்டித்து
எய்த்திலபோய், திசைகள்தொறும் இருநிலத்தைக் கிழித்து இழிந்த என்னின் அல்லால்,
மத்தகரி வயமாவின் வாள்நிருதர் பெருங்கடலின் மற்று இவ் வாளி
தைத்துளதாய் நின்றது என ஒன்றேயும் காண்பரிய தகையும் காண்மின்.

பொருள் · Meaning in Tamil

கய்த்தலமும் - யானையின் தும்பிக்கையும்; காத்திரமும் - முன்னங் கால்களையும்; கருங்கழுத்தும் - பெரிய வலிய கழுத்தும்; நெடும் புயமும் - நீண்ட தோள்களையும்; உரமும் கண்டித்து - மார்பையும் துண்டித்து; எய்த்தில போய் - சளைக்காமல் சென்று; திசைகள் தொறும் - திக்குகள் தோறும்; இருநிலத்தைக் கிழித்து - பெரிய நிலத்தைக் கிழித்துக் கொண்டு; இழிந்தது என்னின் அல்லால் - பாதலத்தில் இறங்கின என்று சொல்வது தவிர; மத்த கரிவய மாவின் வாள் நிருதர் - மதமிக்க யானை வெற்றி தரும் குதிரை, படைவீரர்கள் ஆகிய; பெருங்கடலின் - பெரிய கடலின் மீது; இவ்வாளி தய்த்து உளவாய் நின்றது என - இராமனின் இவ் அம்பு தைத்துக் கிடப்பதாயிற்று என்று; ஒன்றேயும் காண்பு அரிய தகையும் - சிறிதும் காணற்கரிய தன்மையும்; காண்மின் - பாருங்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Severing trunks and forelegs, dark necks, long shoulders and chests,
  2. they went on unwearied, and, in every direction, tore the wide earth and went down; other than that,
  3. in the great sea of rutting elephants, mighty horses and sword-bearing demons,
  4. see how rare it is to find even one arrow that has stuck there and stayed.'

What the poem says

Each of Irāmaṉ's arrows passed through the elephants' trunks and legs and through the demons' necks, arms and chests. Without losing any speed, it then ripped through the ground and went on down into the underworld.

In all that vast sea of dead elephants, horses and demon warriors, it is hard to find even one arrow lodged in a body. They all went straight through.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"kayttalamum, kāttiramum, karuṅ kaḻuttum neṭum puyamum, uramum, kaṇṭittu
eyttila pōy, ticaikaḷtoṟum iru nilattaik kiḻittu iḻintatu eṉṉiṉ allāl,
matta kari vaya māviṉ vāḷ nirutar peruṅ kaṭaliṉ maṟṟu iv vāḷi
tayttu uḷavāy niṉṟatu eṉa oṉṟēyum kāṇpu ariya takaiyum kāṇmiṉ.