கம்பராமாயணம் 9664 · யுத்த 32.28

Section யுத்த காண்டம் / 32. வானரர் களம் காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'குமுதம் நாறும் மதத்தன கூற்றன
சமுதரோடு மடிந்தன சார்தரும்
திமிர மா அன்ன செய்கைய இத்திறம்
அமுதின் வந்தன ஐ இரு கோடியால்.

பொருள் · Meaning in Tamil

குமுதம் நாறும் மதத்தன - குமுத மலர்களின் மணம் வீசுகின்ற மத நீரை உடையனவும்; கூற்றன - எமன் போலக் கொடுமையுடையனவும்; சமுதரோடு மடிந்தன - பாகரோடு மடிந்து கிடப்பனவும்; சார் தரும் திமிரமா அன்ன செய்கைய - முன் சார்கின்ற கரும்பன்றி போலும் செய்கை கொண்டனவும் ஆகிய யானைகள்; இத்திறம் அமிர்தின் வந்தன - முன்னர் பாற்கடலில் அமுதத்தோடு பிறந்தன; ஐயிரு கோடி - பத்துக்கோடி எனும் அளவுடையன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'With rut that smells of the kumutam lily, like Death itself,
  2. dead together with their drivers, in deeds like the dark
  3. boar that charges, these of this kind came forth
  4. with the nectar, ten crores of them.'

What the poem says

Vīṭaṇaṉ now tells the monkeys about the different breeds of elephant lying dead on the field. Here are ten crores of elephants whose musth smells like the water lily. They were as deadly as Death and charged like dark wild boars, and they lie dead with their riders.

They belong to the breed that rose out of the Ocean of Milk with the nectar of immortality when gods and demons churned it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'kumutam nāṟum matattaṉa kūṟṟaṉa
camutarōṭu maṭintaṉa cārtarum
timira mā aṉṉa ceykaiya it tiṟam
amirtiṉ vantaṉa ai iru kōṭiyāl.