கம்பராமாயணம் 9672 · யுத்த 32.36

Section யுத்த காண்டம் / 32. வானரர் களம் காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆரியன் தொழுது ஆங்கு அவன் பாங்கரின்
போர் இயற்கை நினைந்து எழும் பொம்மலார்
பேர் உயிர்ப்பொடு இருந்தனர்; பின்பு உறும்
காரியத்தின் நிலைமை கழறுவாம்.

பொருள் · Meaning in Tamil

ஆரியன் தொழுது - உயர்ந்தோனாம் இராமனை வணங்கி; ஆங்கு அவன் பாங்கு - அங்கு அவன் பக்கத்தில்; அரும்போர் இயற்கை நினைந்து - அரிய போரின் இயல்பை எண்ணி; எழு பொம்மலார் - எழுகின்ற பெருமகிழ்ச்சியுடையோராய்; பேர் உயிர்ப்பொடு இருந்தனர் - பெருமூச்சு விட்டிருந்தனர்; பின்பு உறும் - இனிப் பின்பு நிகழும்; காரியத்தின் நிலைமை கழறுவாம் - செயல்களின் நிலைமையைக் கூறுவோம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Having bowed to the noble one, there beside him,
  2. swelling with joy as they thought of the nature of that battle,
  3. they sat with deep sighs; next we shall tell
  4. how matters stood in what followed.

What the poem says

The monkey leaders reach Irāmaṉ, whom the poet calls the noble one, and bow to him. They sit beside him, breathing deeply, their hearts swelling with joy as they think over the extraordinary battle they have just seen.

The poet closes the section by announcing that he will now tell what happened next. The story turns to Irāvaṇaṉ in his palace.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āriyaṉ toḻutu āṅku avaṉ pāṅkarum
pōr iyaṟkai niṉaintu eḻu pommalār
pēr uyirppoṭu iruntaṉar; piṉpu uṟum
kāriyattiṉ nilaimai kaḻaṟuvām.