கம்பராமாயணம் 979 · பால 15.16
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நெய்தாவும் வேலானொடு - நெய்பூசப் பெற்ற வேலேந்திய (தன்) கணவனோடு; நெஞ்சு புலந்து நின்றாள் - (மனத்திற்) பிணக்கம் கொண்டிருந்த ஒருத்தி; மைதாழ் கருங்கண்கள் - அஞ்சன மை தங்கிய கரிய கண்களில்; சிவப்பு உற வந்து தோன்ற - செந்நிறம் மிக வந்து தோன்றச் (சினந்து); எய்தாது நின்ற மலர்நோக்கி - (தனக்கு) எட்டாமல் இருந்த மலரைப் பார்த்து; இது எனக்கு ஈண்டக் கொய்து ஈதி - “இந்த மலர் எனக்குக் கிடைக்க அதனைக் கொய்து கொடு” என்று; ஓர் குயிலைக் கரம் கூப்புகின்றாள் - (ஊடலால் கணவனை வேண்டாது) ஒரு குயிலை நோக்கிக் கை கூப்பினாள்.
கணவனைக் கைகூப்புவதற்கு மாறாக, ஊடலால், குயிலைக் கரங் கூப்பினாள். குயிலைக் “கொய்து ஈதி” என வேண்டியது, “அஃறிணை மருங்கினும் அறையப்படுமே” (தொல்.) எனும் அகப்பொருள் விதியை உட்கொண்டது. நெய் தாவும் வேலான் அவன். மை தாங்கும் வேலாள் இவள். இருவர்க்கும் இடையே நடக்கும் ஊடற் போரில், நெய் தாவும் வேல் தோற்கும் என்பதைக் குறிப்பால் உணர்த்த, “கண்கள் சிவப்பு உற (மிக) வந்து தோன்ற” என்றார். “நான் வேண்டியது ஈவார் இங்கு யாரும் இல்லை; நீயாவது பறித்துத் தா!” என அவன் அருகிருக்கவும் ஊடலால் கூறினாள். ஒரு குயிலை, ஒரு குயில் கரங்கூப்பி நின்றது எனும் ஒரு நயமும் தோன்றும். நின்றம் மலர் - செய்யுளாதலின் இசைக்காக மகரம் விரிந்தது. சிவப்பு வெகுளி. “கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள்” (தொல். உரி. 76)
ஆங்கிலம் · English translationAI
Translation
- Her dark eyes, heavy with collyrium, turning red,
- one who stood sulking at heart with her husband, whose spear glistens with ghee,
- looking at a flower beyond her reach, saying, 'Pick it and give it to me here,'
- joins her palms in appeal to a cuckoo.
What the poem says
A woman is sulking after a quarrel with her husband. Her eyes are red with anger. She wants a flower she cannot reach, but rather than ask him, though he is standing right beside her, she makes a show of begging a cuckoo to pick it for her.
The love-poetry tradition allows speech to be addressed to birds and other non-human listeners. The poet hints that in this lovers' war her collyrium-darkened eyes will defeat his ghee-polished spear. There is also a joke: a cuckoo-voiced woman is folding her hands to a cuckoo.