கம்பராமாயணம் 980 · பால 15.17

Section பால காண்டம் / 15. பூக்கொய் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

செம்மாந்த தெங்கின் இளநீரை - உயர்ந்தோங்கி நின்ற தென்னையின் இளநீரையுடைய காயை; ஓர் செம்மல் - ஒரு தலைவன்; அம்மா! - என்ன வியப்பு! இவை மங்கையர் கொங்கைகள் ஆகும் என்ன - இவ்விளநீர்க் காய்கள் மங்கையரின் கொங்கைகளுக்கு ஒப்பாகும் என்று கூற; எம் மாதர் கொங்கைக்கு இவை ஒப்பன - (அது கேட்ட அவன் மனைவி) இவ்விளநீர்கள் நீ பார்த்த எந்த எந்த மங்கைகளின் கொங்கைகளுக்கு ஒப்பாவன?; என்று - என்று கேட்டு; விம்மா - விம்மி; வெதும்பா - மனம் கொதித்து; முகம் வெயரா - முகம் வெயர்த்து; வெய்துயிர்த்தாள் - வெப்பப் பெருமூச்சு விட்டாள்.

இளநீரை மங்கையர் கொங்கைக்குவமித்தல் மரபாதலால், “இவை மங்கையர் கொங்கைகள் ஆகும்” என்றான் தலைவன். ஆனால், “இவை மங்கையே! நின்கொங்கைகள் ஆகும்” என்னாமல், “இவை மங்கையர் கொங்கைகள் ஆகும்” எனப் பன்மையாற் கூறியது, தலைவியின் ஊடற்கு ஏதுவாயிற்று. “யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று” எனும் அருமைத் திருக்குறள் (1314) இங்கு நினையற் பாலது. தன் கணவன் தூய்மையை வீணாக ஐயுறுகிறாள் என்பார் ஏழை என்றார்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. A lord looked at the tender coconuts of a towering palm
  2. and said, 'Ah! These are the breasts of young women!'
  3. 'The breasts of which women of yours are these like?' said a foolish girl,
  4. and sobbing, seething, her face breaking into sweat, she sighed hot sighs.

What the poem says

A man looks up at the green coconuts on a tall palm and remarks, using the stock comparison of love poetry, that they are like "women's breasts". His wife catches the plural at once. Which women's breasts, she demands, has he been looking at? She sobs, fumes and sweats with jealousy.

The poet recalls a Tirukkuṟaḷ couplet in which a lover says "I love you more than anyone", and his beloved sulks, asking "More than whom?" He calls the wife "foolish" because she suspects her faithful husband for nothing.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cemmānta teṅkiṉ iḷanīrai or cemmal nōkki
'ammā! ivai maṅkaiyar koṅkaikaḷ ākum' eṉṉa,
'em mātar koṅkaikku ivai oppaṉa?' eṉṟu, ōr ēḻai
vimmā, vetumpā, veyarā mukam, veytuyirttāḷ.