கம்பராமாயணம் 981 · பால 15.18
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
போர் என்ன வீங்கும் - போர் என்று சொன்ன அளவிலேயே (மகிழ்ச்சியில்) பூரித்துப் பெருக்கும்; பொருப்பன்ன - மலையினைப் போன்ற; பொலம் கொள் - அழகு வாய்ந்த; திண் தோள் - வலிய தோள்களையுடையவனாய்; மாரன் அனையான் - (அழகில்) மன்மதனை ஒப்பவனாய்; மலர்கொய்து இருந்தானை - பூக்களைப் பறித்துக் கொண்டிருந்த (தன்) கணவனை; கார் அன்ன கூந்தல் - கார் மேகம் போன்ற கூந்தலையுடையவளாய்; ஓர் குயில் அன்னவள் - (குரலில்) ஒப்பற்ற குயிலைப் போன்றவளான ஒருத்தி; வந்து - (அவன் அருகில்) வந்து; கண் புதைப்ப - (அவன்) கண்களைப் பொத்தினாளாக; ஆர் என்னலோடும் - (அப்போது அவன்) என் கண்களைப் பொத்தியவர் யார்? என்று கேட்டவுடனே; அனல் என்ன - (அவள்) தீ போன்று வெதும்பி; அயிர்த்து உயிர்த்தாள் - ஐயமுற்று (வெப்பப்) பெரு மூச்சு விட்டாள்.
தான் கண்ணைப் பொத்தியவுடன், தன் பெயரைச் சொல்லிக் 'கையை எடு' என்று சொல்ல வேண்டிய தன் கணவன், 'ஆர்' என்று வினவியதால் தன்னைப் போன்றே இவன் கண் பொத்தி விளையாடும் மகளிர், வேறு சிலரும் உள்ளார்கள் போலும் என்ற ஐயத்தால் இவள் ஊடல் கொண்டாள் என்றபடி. போர் என்று சொன்னவுடன் உடம்பு பூரித்து, தோள் பெருக்கும் வீரமரபினைக் குறித்தவாறு. “கிட்டியது அமர் எனக் கிளரும் தோளினான்” (கம்ப. 2311) எனக் குகனைப் பின்பு குறிப்பார். “போர் எனிற் புகலும் புனைகழல் மறவர்” (புறம். 31.9) என்பதும் காண்க. மகளிர் தலைவர் கண்களைப் புதைத்தல் வழக்கம் என்பது: “நலம் பெறு கையின் என் கண் புதைத்தாயே!...... நீயலது உளரோ என் நெஞ்சு அமர்ந்தோரே!” (ஓங். 293. 2. 5) அக்கால ஆடவர் வீரமும் ஈரமும் ஒருசேர இப்பாடலில் குறித்தார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- One like Māraṉ, with strong, handsome, mountain-like shoulders that swell at the word 'war',
- was sitting picking flowers; a woman like a cuckoo,
- with hair like dark rain clouds, came and covered his eyes;
- the moment he said 'Who is it?', she sighed like fire, full of suspicion.
What the poem says
A handsome warrior, whose shoulders swell with eagerness at the mere mention of battle, sits picking flowers. His wife creeps up and covers his eyes with her hands, a lovers' game.
He asks "Who is it?" instead of saying her name. She is instantly suspicious. If he has to ask, other women must play this game with him too. She lets out a burning sigh. The verse sets the warrior's courage beside the tenderness of love.