கம்பராமாயணம் 982 · பால 15.19
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சேற்றால் விளையாத - சேற்றில் உதிக்காத; செந்தாமரைக் கைகள் - செந்தாமரை மலரை ஒத்த கைகளை; நீட்டி ஏற்றார் மாதர் - (கணவனாகிய அரசன் பறித்துத்தர மலர்கள் வேண்டும் என்ற) நீட்டிக் கேட்ட மனைவிமார்க்கு; ஒர் மன்னன் - ஓர் அரசன்; நறை ஊற்று ஆர்நாள் மலர் - தேன் சொட்டுகின்ற நிறைந்த அன்றலர்ந்த மலர்களை; உதவான் - கொடாதவனாய்; இடை ஏந்தினன் - (அவ்விருவர்க்கும்) இடையே (தானே) ஏந்தினவனாய்; மாற்றான் உதவான் - (யார்க்கும்) மறுக்காமலும் கொடுக்காமலும்; கடு வச்சையன் போல் - கொடிய உலோபியைப் போல; நின்று ஒழிந்தான் - எதுவும் செய்ய இயலாமல் நின்று இருந்தான்.
ஓர் மன்னன் கைகள் நீட்டி ஏற்றார்க்கு உதவான் இடை ஏந்தினன் நின்றொழிந்தான் என்று கூட்டுக. மாதர் ஒருங்கு ஏற்றார் என்பதனால், மாதர் ஒருவர் அல்லர் என்பது பெறப்பட்டது. தன் மனைவியர் இருவரும் ஒருசேரக் கேட்டதனால் சமமாகப் பங்கிட்டுத்தரினும் யார்க்கு முதலில் தந்தது என்று ஊடுவர். அதனால், மலர்களைக் கொடுக்கவும் மறுக்கவும் மாட்டாமல் கொடிய உலோபியைப் போல் நின்றான் என்றார். கொடாமல் இருப்பது உலோபம். கொடுக்க மறாமலும் நிற்பது கொடும் உலோபம். உடனே மறுத்துவிடின் இரப்போர் வேறிடம் நாடி இரக்க வாய்ப்பு உண்டு; அவ்வாய்ப்பினையும் இழக்க வைப்பதால் “கடு வச்சையன்” என்றார்
ஆங்கிலம் · English translationAI
Translation
- When the women together stretched out their red-lotus hands, which were not grown from mud,
- for the fresh flowers brimming with honey,
- one king, not looking at those who asked, stood holding them up between them;
- refusing nothing and giving nothing, he stood like a hard-hearted miser.
What the poem says
A king has picked fresh flowers full of honey, and two of his wives hold out their lotus-like hands for them at the same moment. He is stuck. Whichever wife he serves first, the other will sulk, and even an equal share will not settle who came first.
So he stands holding the flowers up between them, neither giving nor refusing, like the worst kind of miser. The poet notes that such a man is crueller than one who simply says no, since a beggar who is refused can at least go and ask elsewhere.