கம்பராமாயணம் 986 · பால 15.23

Section பால காண்டம் / 15. பூக்கொய் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வந்து எங்கும், தன் மன் உயிரேயோ? பிறிது ஒன்றோ?
கந்தம் துன்றும் சோர் குழல் காணாள், கலை பேணாள்,
அந்தம் தோறும் அற்று உகும் முத்தம் அவை பாராள்,
சிந்தும் சந்தத் தேம் மலர் நாடித் திரிவாளும்.

பொருள் · Meaning in Tamil

கந்தம் துன்றும் - (அம்மகளிர்) மணம் நிரம்பியுள்ள; சோர்குழல் காணார் - (தம்) அவிழ்ந்துள்ள கூந்தலைக் கவனித்துப் பாராமலும்; கலை பேணார் - (இடையில்) உடுத்திருந்த ஆடை அவிழ்தலைப் பொருட்படுத்தாமலும்; அந்தம் தோறும் - (அச்சோலையின்) இறுதி வரையிலும்; அற்று உகும் முத்தம் அவை பாரார் - (ஓடும் வேகத்தால்) முத்துச் சரங்கள் அற்று அற்று விழுவதை மதியாமலும்; தம்மன் உயிரேயோ? - (இவர் தேடுவது) தமது உடம்பில் தங்கும் தன்மையினையுடைய உயிரைத் தானோ?; பிறிது ஒன்றோ? - (அன்றி) வேறு முக்கியமானதொரு பொருளைத் தானோ? (என்று பார்ப்பவர் கருதுமாறு); எங்கும் வந்து - (அச்சோலையின்) எவ்விடத்தும் சென்று; சிந்தும் சந்தம் தேன்மலர் - (தேனைச்) சிந்துவனவாகிய அழகிய மலர்களை; நாடித் திரிவாரும் - தேடித் திரிகின்றவர்களும்.

முதல் பன்னிரு கவிகளும் ஆடவர் மகளிர் பலரின் ஆர்வ நிகழ்ச்சிகளைத் தொகுத்துச் சுட்டுகின்றன. உம்மையொடு கூடிய இறுதிச் சொல்லோடு (ஆயினர் எனும் சொல்லைக் கூட்டிப் பொருள் முடிவு கொள்க.) மலர்களின் மேல் மங்கையருக்குள்ள கொள்ளை ஆசையை அழகுறச் சுட்டுகின்றார். கூந்தல் சோர்வதும், உடை சோர்வதும், முத்து மாலைகள் அறுவதும், பெண்டிர் சிறிதும் விரும்பாதவை. பூக்கள் மேல் உள்ளவிருப்பம் இவ் விரும்பாதவை விளைவதையும் பொருட்படுத்தாமல் ஓடித் திரிய வைத்தன என்பதாம். “காணார் பேணார் பாரார் வந்து எங்கும் சிந்தும் மலர் நாடித் திரிவாரும்” என வினைமுடிவு கொள்க. சோர் குழல்: வினைத்தொகை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Coming everywhere, as if it were their own dear life they sought, or something else,
  2. not noticing their fragrant hair coming loose, not minding their garments,
  3. not looking at the pearl strings snapping and falling at every corner,
  4. some roamed searching for lovely flowers dripping honey.

What the poem says

A new metre begins a series of verses describing what different people in the grove are doing, each ending "and some..." Here, some women run all over the grove hunting for honey-dripping flowers. They are so eager that onlookers might think they had lost their own lives and were looking for them.

They pay no attention as their fragrant hair comes down, their clothes slip and their pearl necklaces snap and scatter, though normally these are the things women care about most.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vantu eṅkum, tam maṉ uyirēyō? piṟitu oṉṟō?
kantam tuṉṟum cōr kuḻal kāṇār, kalai pēṇār,
antamtōṟum aṟṟu ukum muttam avai pārār,
cintum cantat tē malar nāṭit tirivārum.