கம்பராமாயணம் 987 · பால 15.24
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
யாழ் ஒக்கும் சொல் - யாழிசையை யொத்து இனிமை பயக்கும் மொழிபேசும்; பொன் அனையாள் - திருமகளைப் போன்றாள் ஒருத்தி; ஓர் இகல் மன்னன் - ஒப்பற்ற வலிமை வாய்ந்த (தன்) கணவனான அரசன்; தாழ - (தன்னை) வணங்கி நிற்க; தாழாள் - (சிறிதும்) மனம் இளகாதவளாயிருந்து; தாழ்ந்த மனத்தாள் - (அவன் அப்பாற் சென்றவுடன்) (பின்பு) மனம் இளகியவளாய், தளர்கின்றாள் - (தன் செயலுக்கு) மிகவும் வருந்தியவளாய்; ஆழத்து உள்ளும் கள்ளம் நினைப்பாள் - ஆழ்ந்து எண்ணிய சூழ்ச்சியை மனத்துட் கொண்டவளாய்; அவன் நிற்கும் சூழற்கே - கணவன் நிற்கின்ற சோலையின் பகுதிக்கே (ஏகுமாறு); தன் கிள்ளையை ஏவித் தொடர்வாளும் - தான் வளர்த்த செல்லக் கிளியை முன்னால் ஏவிப் பின்னால் அதனைத் தொடர்ந்து செல்வாளும். தாழத் தாழாமையை “உணர்ப்பு வயின் வாரா ஊடல்” என்பர் தொல்காப்பியர் (தொல். கற்பு. 9). தன் உரிமை மிகுதியால், யாரேனும் அவன் உள்ளத்தின் ஆழத்தே குடி புகுந்திருக்கக் கூடுமோ என்று அவன் கள்ள உள்ளம் சிந்திப்பாள் என்பார், “ஆழத்து உள்ளும் கள்ளம் நினைப்பாள்” என்றார். இகல் - வலிமை. சூழல் - இடம். கிள்ளை - கிளி. தாழாள், தளர்கின்றாள், நினைப்பாள் - முற்றெச்சங்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- One lovely as gold, whose words were like the lute, when a mighty king
- bowed to her, would not bend; then, her heart softening, she grew faint,
- and, harbouring a scheme deep within her,
- sent her parrot off to the very spot where he stood, and followed it.
What the poem says
A woman with a voice as sweet as a lute is sulking. When her husband, a mighty king, humbles himself before her, she refuses to give in. As soon as he walks away she softens and regrets it.
Too proud to go after him openly, she thinks up a trick. She sends her pet parrot flying toward where he stands and follows it, as though she were only chasing the bird. The commentary also notes her lurking suspicion that some other woman may have found a place deep in his heart.