கம்பராமாயணம் 988 · பால 15.25

Section பால காண்டம் / 15. பூக்கொய் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அம் தார் ஆகத்து - அழகிய மலர் மாலையணிந்த மார்பில்; ஐங்கணை நூறு ஆயிரம் ஆக - மன்மதனின் ஐந்து பூங்கணைகளும் இலட்சக்கணக்கில் பாய்ந்ததனால்; சிந்தா நின்ற சிந்தையினான் - சிந்துகின்ற (சிதறுகின்ற) சிந்தையுடையவனான ஒருவன்; செய்குவது ஓரான் - (தான்) செய்யவேண்டிய செயல் இதுவெனத் தெரியாதவனாய்; மாதவி - குருக்கத்திக் கொடியே; மந்தாரம் கொண்டு ஈகுதியோ? - (நீ) மந்தார மலரைப் பூத்துத் தருவாயோ?; என்று - எனக் கூறி; சந்து ஆர் கொங்கை - சந்தனக் குழம்பணிந்த கொங்கையும்; ஓர்தாழ்குழலாள் பால் - தாழ்ந்த கூந்தலையும் உடையாள் ஒருத்தியிடம்; தளர்வானும் - (மனம்) தளர்ந்து நிற்பவனும்.

மன்மதனுடைய மலர்க் கண்கள் துளைத்த மார்பினையுடைய வீரன் ஒருவன், தன் காதலி ஊடலால் நீங்கிப் போனதனை ஆற்றாமல் சிந்தை திரிந்தவனாய், மாதவிக் கொடியிடத்தில் மந்தார மலர் கேட்டு மயங்கிப் பிதற்றினான் என்பதாம். போர்க்களத்தில் பகைவர் கொடுங்கணைகளுக்கு நிலைகுலையுமாறு வெற்றி மாலைகளைச் சூடிய மார்பேந்தியவன், மன்மதனின் பூங்கணைகளுக்கு ஆற்றாது நிலை குலைந்து போனான் என்பார். காதலின் வலிமை கூறியவாறு. “எண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்கும் என் பீடு” (திருக். 1088) என்பார் திருவள்ளுவதேவரும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With a hundred thousand of the five flower-arrows in his lovely garlanded chest,
  2. his mind scattered, not knowing what to do,
  3. 'Mādhavī creeper, will you bring me a mandāra flower?' he said,
  4. and some went limp before a woman with sandal-smeared breasts and long, flowing hair.

What the poem says

A warrior has been struck in the chest by the love god's five flower-arrows, not once but a hundred thousand times. His sweetheart has left him after a quarrel, and his mind is so scattered that he babbles nonsense. He asks a mādhavī creeper to give him mandāra flowers, which it cannot bear.

Then he stands helpless before the woman herself. A chest that never flinched before enemy arrows in battle gives way to the love god's flowers. A Tirukkuṟaḷ couplet makes the same point about a hero undone by love.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1am tār ākattu, aiṅ kaṇai nūṟāyiram ākac
cintā niṉṟa cintaiyiṉāṉ, ceykuvatu ōrāṉ,
'mantāram koṇṭu īkutiyō? mātavi!' eṉṟu, ōr
cantu ār koṅkait tāḻ kuḻalāḷpāl taḷarvāṉum.