கம்பராமாயணம் 9885 · யுத்த 36.124
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நீலம் கொண்டு ஆர் - நீல நிறம் வந்து பொருந்திய; கண்டனும் - கழுத்தை உடைய சிவபெருமானும்; நேமிப் படையோனும் - சக்கரப் படை படைத்த திருமாலும், மூலம் கொண்டார் - (திருமாலின் நாபிக் கமலத்தை) மூலமாகக் கொண்ட பிரமனும்; கண்டகர் - கொடிய அரக்கரின்; ஆவி முடிவிப்பான் - உயிரை அழிப்பதற்கு, காலம் கொண்டார் - உரிய காலத்தை அமைத்துக் கொண்டார்; அண்டரை எல்லாம் - தேவாதி தேவர்களை எல்லாம்; தொழில் கொண்டான் - ஏவல் கொண்டவனாகிய இராவணன்; முன்னே கண்டன கழிவிப்பான் - கண்ணுக்கு முன்னே காண்பனவெல்லாம் அழித்தல் கருதியவனாய்; சூலம் கொண்டான் - ஒரு சூலாயுதத்தை ஏந்தினான்.
மூலம் - கொப்பூழ்த் தாமரையாகிய மூலம்; கண்டகர் - முள் போன்ற கொடியவர்
ஆங்கிலம் · English translationAI
Translation
- He of the dark-blue throat, and he who bears the discus,
- and he whose origin is the lotus, had fixed the time
- to end the lives of the thorn-like wicked; to destroy everything before his eyes,
- he who had made all the gods his servants took up a trident.
What the poem says
The gods Śiva (blue-throated from drinking the cosmic poison), Viṣṇu (bearer of the discus) and Brahmā (born from the lotus in Viṣṇu's navel) have between them settled that the time has come to end the cruel rākṣasas, who are like thorns. Irāvaṇaṉ, who once made all the gods his servants, now takes up a trident, meaning to destroy everything in front of him.
The section in which Irāvaṇaṉ hurls his trident begins here, in a new metre.