கம்பராமாயணம் 9888 · யுத்த 36.127
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
'செல்வாய்' என்ன - 'சென்று வா' என்று; செல்ல விடுத்தான் - (இராவணன்) சூலத்தைச் செல்லுமாறு ஏவினான்; வானோர் - தேவர்கள்; மெலிகின்றார் - (உடலும் மனமும்) வாட்டமுற்றவராய்; 'வள்ளால் இது தீர்த்தற்கு நீயே ஒல்வாய் - வள்ளலே! இதனை அழித்தற்கு உன்னால்தான் முடியும்; வேறு ஒருவர்க்கும் உடையாது - பிறர் எவராலும் (இதனை) அழிக்கவொண்ணாது; வல்வாய் வெங்கண் சூலம் - வலிய வாயுடன் கொடிதாய் வரும் சூலம்; எனும் காலனை - எனப் (பெயர் தரித்த) கூற்றுவனை; வெல்வாய் வெல்வாய் - வெற்றி கொள்க, வெற்றி கொள்க'; என்றனர் - என்று வேண்டினர்.
ஆல் - அசை. ஒல்லுதல் - முடிதல்; அச்சம் காரணமாக விரைவுற்று இருமுறை 'வெல்வாய் வெல்வாய்' என அடுக்கினர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Go!' he said, and let it go. 'To put an end to this,
- you alone are able; no one else has the power;
- this Death that is the strong-mouthed, cruel-eyed trident, O generous one,
- conquer it, conquer it!' cried the gods, wasting away with fear.
What the poem says
Irāvaṇaṉ sends the trident on its way. The gods, weak with terror, beg Irāmaṉ, the generous one, to destroy it, since nobody else can: the trident is Death itself.
Their fear shows in the doubled cry 'conquer, conquer!', repeated in their haste.