கம்பராமாயணம் 991 · பால 15.28

Section பால காண்டம் / 15. பூக்கொய் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வம்பில் பொங்கும் கொங்கை சுமக்கும் வலி இன்றிக்
கம்பிக் கின்ற நுண் இடை நோவக் கசிவாளும்,
பைம்பொன் கிண்ணம் மெல் விரல் தாங்கிப், பயில்கின்ற
கொம்பில் கிள்ளைப் பிள்ளை ஒளிப்பக், குழைவாளும்.

பொருள் · Meaning in Tamil

வம்பின் பொங்கும் - கச்சுக்கு அடங்காது ததும்புகின்ற; கொங்கை சுமக்கும் வலி இன்றி - கொங்கைகளைச் சுமக்கின்ற வலிமையின்றி; கம்பிக்கின்ற - நடுங்குகின்ற; நுண் இடை நோவ - நுண்ணிய இடை வருந்துதலால்; கசிவாளும் - வருந்துவாள் ஒருத்தியும்; பயில்கின்ற கொம்பில் - நெருங்கியடர்ந்த கொம்புகளினிடையே; கிள்ளைப் பிள்ளை ஒளிக்க - (தான் வளர்த்த) கிளிப்பிள்ளை ஒளிந்து கொள்ள; பைம்பொன் கிண்ணம் - பசும்பொன்னாற் செய்யப்பெற்ற கிண்ணத்தை, மெல்விரல் தாங்கி - மெல்லிய விரல்களில் தாங்கியவாறு; குழைவாளும் - (அதற்கு உணவூட்ட இயலாமைக்கு) வருந்தித் தளர்வாள் ஒருத்தியும்.

பெண்மை கட்புலன் ஆவதோர் மென்மைத் தன்மையாவதால், அவர்தம் உடல் உள்ளம் இரண்டின் மென்மையும் ஒருங்கு சுட்டுகின்றார். “கம்பிக்கின்ற நுண்ணிடை” என்பதனால், பெண்மையின் உடல மென்மையும், “கிள்ளைப் பிள்ளை ஒளிக்கக் குழைவாள்” என்பதனால், உயிர் ஓம்பும் அன்பு மயமான உள்ள மென்மையும் சுட்டினார். பச்சைக் கொடிகட்கிடையே பச்சைக் கிளிப்பிள்ளை ஒளிந்து கொண்டால், கண்டு கொள்வது அரிது ஆதலின் வருந்துவாள் என்பார் “கிள்ளைப்பிள்ளை ஒளிக்கக் குழைவாள்” என்றார். பைம் பொற்கிண்ணம் பெரிதாதலின் அதனை நெடுநேரம் தாங்கும் தன்மை அவள் மெல்லிய சிறு விரல்கட்கு இல்லை என்பார் “மெல்விரல் தாங்கி” என்றார். வம்பு: மார்புக் கச்சு. கம்பித்தல்: நடுங்குதல், அசைதல். கசிதல்: அழுதல், வருந்துதல். குழைதல்: தளர்தல். கிளிக் குஞ்சுகளைக் கிளிப்பிள்ளை என்பது மரபு. “பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்று இளமை” (தொல். மரபு. 4) என்பது தொல்காப்பிய மரபியல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. One wilted, as her slender waist, trembling without the strength to carry
  2. the breasts that swelled beyond her bodice, ached;
  3. another, holding a bowl of fine gold in her soft fingers,
  4. drooped because her young parrot hid among the crowded boughs.

What the poem says

Two vignettes of feminine delicacy. One woman is worn out because her slender waist trembles under the weight of her full breasts.

Another holds a heavy golden feeding bowl in her small fingers, waiting to feed her pet parrot chick. The green chick has hidden among the green leaves where she cannot find it, and she droops with distress. The first shows tenderness of body, the second tenderness of heart.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vampiṉ poṅkum koṅkai cumakkum vali iṉṟik
kampikkiṉṟa nuṇ iṭai nōvak kacivāḷum,
paim poṉ kiṇṇam mel viral tāṅki, payilkiṉṟa
kompil kiḷḷaip piḷḷai oḷikka, kuḻaivāḷum.