கம்பராமாயணம் 992 · பால 15.29

Section பால காண்டம் / 15. பூக்கொய் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தன்னைக் கண்டாள் மெல் நடை கண்டாள், தமரேபோல்
துன்னக் கண்டாள்,'தோழமை' என்றாள்,'துணை' என்றாள்,
'உன்னைக் கண்டார் எள்ளுவர்; பொல்லாது; உடு நீ!' என்று,
அன்னக் கன்னிக்கு ஆடை அளிப்பான் அமைவாளும்.

பொருள் · Meaning in Tamil

மெல் நடை கண்டாள் - (அன்னத்தின்) மெல்லிய நடையினைக் கண்டாள் ஒருத்தி; தன்னைக் கண்டாள் - அந்நடையில் தன்னையே கண்டாளாய்; தமரே போல் - சுற்றத்தாரையே போல; துன்னக் கண்டாள் - (இவள் நடை கற்க) அவ்வன்னம் நெருங்கி நெருங்கி வருவதைக் காண்பவளாய், தோழமை கொண்டாள் - அதனோடு தோழமை கொண்டவளாய், துணை என்றாள் - நீ என் (அரிய) துணையாவாய் என்று சொல்லியவளாய்; உன்னைக் காண்பார் எள்ளுவர் - (அவ்வன்னத்தை நோக்கி) நீ ஆடையின்றி இருப்பதைக் கண்டவர்கள் உன்னைப் பழிப்பார்கள்; பொல்லாது - (அப்படியிருப்பது) தவறு; உடு நீ - நீ (இந்த ஆடையை) உடுத்துக் கொள் என்று; அன்னக் கன்னிக்கு - இளமைமிக்க அன்னப் பெடைக்கு; ஆடை அளிப்பான் - (தன்) ஆடையைக் கொடுக்க; அமைவாளும் - உடன்படுவாளும்.

அன்ன நடையில் தன் நடையைக் கண்டாள் ஆதலின், “மென்நடை கண்டாள் தன்னைக் கண்டாள்” என்றார். சுற்றி நெருங்கியிருப்பவர்கள் சுற்றத்தார் ஆதலின் “தமரே போல் துன்னக் கண்டாள்” என்றார். குருதித் தொடர்பு இன்மையின் “தோழமை கொண்டாள்” என்றார். கன்னியொருத்தி, ஆடைக்குறையோடிருப்பது பழிப்புக்கும் தீமைக்கும் ஏதுவாம் ஆதலின், “அன்னக்கன்னிக்கு கண்டார் எள்ளுவர்: பொல்லாது உடு நீ” என்று ஆடை அளித்தாள். கவரும் பருவத்தில், பெண்டிர் உடல் மூடி ஆடை அணிதலின் இன்றியமையாமையை அன்னத்தின் மேல் வைத்து அறிவித்தவாறாம். பெண்மையின் இரக்கப்பண்பும் உணர்ச்சி ஓட்பமும் ஒழுங்கு சுட்டியவாறு. ஆடை அளிப்பான்: ஆடையளிப்பதற்காக - பான் ஈற்று வினை எச்சம். காரணப்பொருட்டு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. She saw herself in it, she saw its gentle gait; seeing it come close
  2. as if it were her own kin, she took it as a friend and called it her companion,
  3. and saying, 'Those who see you will mock you; this is not right; put this on!',
  4. some made ready to give her garment to the maiden swan.

What the poem says

A woman sees a young female swan whose graceful walk looks just like her own. It keeps coming close to her as if it were family, so she adopts it as her friend.

Then, seriously concerned, she tells it that a young girl should not go about with nothing on, because people will talk, and she offers it her own garment to wear. The scene shows the women's tenderness, and teasingly makes the point that a grown girl must be properly covered.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1taṉṉaik kaṇṭāḷ meṉ naṭai kaṇṭāḷ, tamarēpōl
tuṉṉak kaṇṭāḷ, 'tōḻamai' koṇṭāḷ, 'tuṇai' eṉṟāḷ,
'uṉṉaik kaṇṭār eḷḷuvar; pollātu; uṭu nī!' eṉṟu,
aṉṉak kaṉṉikku āṭai aḷippāṉ amaivāḷum.