கம்பராமாயணம் 993 · பால 15.30
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பாகு ஒக்கும் சொல் - தீம் பாகினைப் போன்ற இனிய சொல்லுடைய; நுண் கலையாள் - மெல்லிய ஆடையை அணிந்தவளாகிய ஒருத்தி; தன் படர் அல்குல் - தனது பரந்த அரையிடத்தை; ஆகக் கண்டு - கண்கூடாகக் கண்டு; ஓர் ஆடுஅரவாம் - (இது) படம் எடுத்து ஆடுகின்ற ஒரு பாம்பை ஒக்கும்; என்று - என்று எண்ணி; அயல் நண்ணும் - அருகே நெருங்கும்; தோகைக்கு அஞ்சி - (பாம்பின் பகையான) மயிலுக்குப் பயந்து; கொம்பின் ஒதுங்கி - பூங்கொம்பு ஒன்றிலே பதுங்கி; துணர் ஈன்ற - பூங்கொத்துக்களையுடைய; சாகைத் தம் கை - பூங்கிளை ஒன்றைத் தன் கைகளால் எடுத்து; கண்கள் புதைத்து - (நாணத்தால்) கண்களைப் பொத்திக் கொண்டு; தளர்வாளும் - தளர்வுறுவாளும்.
ஒரு பூங்கொடியில் தன்னை மறைத்துக் கொள்ளுமாறு மென்மைத் தோற்றம் உடையாள் என்பார் “கொம்பின் ஒதுங்கி” என்றார். இதனால் இவள் உருவம் பூங்கொடியினும் மெல்லியது என்றவாறு. இவள் விழிகள் பூக்களைப் போன்றவையாதலால் வேற்றுமை தெரியாதிருக்க பூக்களைக் கைகளால் அள்ளிப் பொத்திக் கொண்டாள் - மயில், இது பூங்கொடியே என்று ஏமாந்து போக வாய்ப்பாகுமாறு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- One whose speech was like syrup, wearing fine cloth, seeing her own broad hips
- become, as it seemed, a dancing hooded snake, and afraid of a peacock
- that came near, hid herself behind a bough, and covering her eyes
- with a branch full of flower clusters in her hands, went faint.
What the poem says
A playful fancy. A woman with a voice sweet as syrup notices that her broad hips, in poetic convention, look like the spread hood of a dancing cobra. When a peacock, the snake's natural enemy, comes near, she is afraid it will take her for a snake and attack.
She hides behind a flowering bough, so slender that it can hide her, and covers her flower-like eyes with a spray of blossoms. That way the bird will see only flowers and take her for part of the plant.