கம்பராமாயணம் 994 · பால 15.31
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தன் நேர் இல்லாள் - தனக்கு ஒப்புச் சொல்ல இயலாத அழகி ஒருத்தி; பொன்னே - பொன் போல் அருமை வாய்ந்தவளே!; தேனே - தேன் போன்று இனிமையானவளே!; பூமகளே - திருமகள் போன்று செல்வம் நிறைந்தவளே!; எனைக் காண் - நான் ஒளிந்து கொள்ளுகிறேன் கண்டுபிடி; எனா - என்று (அவள்) தோழியைப் பார்த்துச் சொல்லி; அங்கு ஒரு கொய்யல் தழை மூழ்கி - அச்சோலையில் உள்ள கொய்தற்குரிய மரத்தின் தழைகளுக்கிடையே மறைந்து கொண்டு; நீ இன்னே என்னைக் காணுதி - இப்போது என்னைக் கண்டுபிடி பார்க்கலாம், என்று இகலி - என்று விளையாட்டுப் பகையோடு; தன் நல் நீலக்கண் - தனது நல்ல கருங்குவளை மலர் அனைய கண்களை; கையில் மறைத்து - (தன்) கைகளால் மூடிக்கொண்டு; நகுவாளும் - சிரித்து மகிழ்வாளும்.
ஒளிந்து விளையாட விரும்பிய ஒருத்தி, தழையிடை மூழ்கி, தன் கண்களை மூடிக்கொண்டு, “என்னைக் கண்டுபிடி பார்க்கலாம்” என்று குரல் கொடுத்தாள். குரல் வரும் வழிச் சென்று தோழி கண்டுபிடித்து விடுவாள் என்று தெரியாத குழந்தைமை சுட்டியவாறு. கண்களைக் கைகளால் மூடிக் கொள்ளும்போது, தனக்கு உலகம் இருண்டிருப்பதைப் போலவே தோழிக்கும் இருண்டிருக்கும் என்று நினைத்தாள் பேதை என்க. “பொன்னே, பூவே, பூமகளே” உவம ஆகு பெயரில் வந்த விளிகள். என்னா: என்று; செய்யா எனும் வினை எச்சம். கொய்யல்; கொய்யல் மரம். கொய்யா இன்றைய வழக்கு. “கொங்கார் கோடலோடு கொய்யல் குழைஇ” (பெருங் 1: 51 : 51) என்பர் கொங்குவேளிரும். இன்னே: இப்பொழுதே. இகல்: பகை, மாறுபாடு. நீலம்: நீலோற்பலம், கருங்குவளைப் பூ. நகுதல்: சிரித்தல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'My gold! My honey! My goddess of the lotus! Find me!' she said,
- and she who had no equal plunged in among the leaves of a koyyal tree there,
- 'Find me now, right now!' she challenged,
- and hid her lovely blue-lily eyes with her hands, and laughed.
What the poem says
A matchless beauty plays hide-and-seek with her friend. Calling her "my gold, my honey, my lotus goddess", she dives in among the leaves of a guava-like koyyal tree, covers her eyes with her hands and shouts "Find me now!", laughing.
She has the innocence of a small child. She does not realise that her voice gives her hiding place away, and she thinks that because she cannot see, no one can see her.