கம்பராமாயணம் 998 · பால 15.35
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உள்ளத்து ஊக்கம் உடைய - (தவம் புரிவதில்) மனத்தில் ஊக்கம் (மிகக்) கொண்ட; முனிவரால் - முனிவர்களிடத்தில்; காமன் கை வில் காக்கல் ஆவது எனும் - காமன் வில்லின் ஆற்றலைக் காக்கத் தக்க ஆற்றல் உண்டு என்று (உலகில்) சொல்லப்படுகின்ற, வாக்குமாத்திரம் அல்லது - வாய்ச் சொல்மட்டும் (பிரபலமே)யன்றி (உண்மையை ஆராய்ந்தால் அம்முனிவர்களின் ஆற்றலைப் பொடியாக்குதற்கு); வல்லியில் பூக்கொய்வாள் - பூங்கொடிகளிலிருந்து பூக்களைக் கொய்யும் ஒருத்தியின்; புருவக் கடைபோதும் - புருவத்தின் நுனிப் பகுதியின் கடைப் பார்வையே போதுமானதாகும்.
முனிவரால் - உருபு மயக்கம். “கண்களவு கொள்ளும் சிறு நோக்கம் காமத்தின் செம்பாகம் அன்று பெரிது” (திருக். 1092) ஆதலின், முனிவர்களின் தவமுயற்சியை யழிக்கப் புருவ வில்லை மகளிர் முழுதும் வளைக்கத் தேவையின்றிக் கடைப்பகுதியின் வளைப்பே போதுமென்பார் “புருவக்கடை போதுமே” என்றார். ஏ - அசை. “கறையடிக் களி யானையின் வரவினைக் கண்டு, மறுகின் உற்றவர் இரிதர மணி மருங்கிடல் போல், உறு தவத்தினர் அறிந்தனர் ஓட ஒண்ணுதற்கு, நறு மலர்ப் பதத்து அணிந்தனள் சிலம்பு ஒரு நங்கை” (பிரபு. லீலை) எனும் பாடல் ஒப்பு நோக்கற்பாலது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- That sages who hold zeal in their hearts
- can ward off the bow in Kāmaṉ's hand is
- a mere saying and no more; for a girl plucking flowers from a creeper
- the corner of her eyebrow is enough.
What the poem says
Still in the flower-gathering grove, the poet turns aside to a general reflection. People say that ascetics, firm in their resolve, can resist the bow of Kāmaṉ, the god of desire. The poet says this is only talk: a woman picking flowers need not even draw her whole eyebrow like a bow. A sidelong flick of its tip is enough to undo their penance.
The thought echoes a couplet of the Tirukkuṟaḷ, where a brief stolen glance is said to be more than half of love.