கம்பராமாயணம் 999 · பால 15.36

Section பால காண்டம் / 15. பூக்கொய் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நாறு பூங்குழல் நன்னுதல் - மணக்கின்ற பூக்களையணிந்த கூந்தலையும் அழகிய நெற்றியையும் உடையாள் ஒருத்தி; புன்னைமேல் ஏறினான் - புன்னை மரத்தின் மீது (பூக்கொய்ய) ஏறியுள்ள தன் கணவனுடைய; மனத்து உம்பர் சென்று ஏறினாள் - மனத்தின் மீது ஏறி அமர்ந்திருந்தாள்; ஊறு ஞானத்து உயர்ந்தவர் ஆயினும் - மனத்தில் ஊற்றாய்ச் சுரக்கின்ற அறிவினைப் பெற்ற உயர்ந்தோர் ஆனாலும்; வீறுசேர் முலை மாதரை வெல்வரோ? - பெருமைமிக்க தனங்களையுடைய பெண்டிரை வெல்லவல்லவர் ஆவரோ? (ஆகார் என்க.)

அவன் புன்னை மேல் ஏறினான். இவளோ அவன் உள்ளத்தின் மேல் ஏறினாள். உருவுடைய மரத்தின் மேல் ஏறலினும் உருவற்ற உள்ளத்தின் மேல் ஏறல் அன்றோ உயர்வுக்குரியது என்றவாறு. வேற்றுப்பொருள்வைப்பணி. ஞானத்தால் உயர்ந்தாரும் காமத்தால் தாழ்வர் என்பது குறிப்பு. “வஞ்சி போல் மருங்குலார் மாட்டு யாவரே வணங்கலாதார்?” (896) என்று முன்பும் கூறினார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. A woman with fragrant flowered tresses and a fair brow
  2. went up and climbed into the heart of the man who had climbed the punnai tree;
  3. though men stand high in wisdom welling from within,
  4. can they ever conquer women of proud breasts?

What the poem says

A husband has climbed a punnai tree to pick its blossoms, but his wife has climbed higher still: she sits on top of his heart. The poet plays on the verb "to climb". Climbing a tree, which has a body, is less of a feat than climbing a mind, which has none.

The last two lines turn this into a general truth, a figure in which a particular case is backed by a universal statement. Even men raised high by wisdom are brought low by desire, and no one gets the better of a woman.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nāṟu pūṅ kuḻal naṉṉutal, puṉṉaimēl
ēṟiṉāṉ maṉattu umpar ceṉṟu ēṟiṉāḷ;
ūṟu ñāṉattu uyarntavar āyiṉum,
vīṟu cēr mulai mātarai velvarō?