தொல்காப்பியம் 1086 · பொருள் 4.1

Section பொருளதிகாரம் / 4. கற்பியல்Poet தொல்காப்பியர்Lines 3

பாடல் · The poem

Tap a word to see where else it occurs.

1

பொருள் · Meaning in TamilAI

கற்பு எனப்படுவது, கொள்வதற்கு உரிய மரபினை உடைய தலைவன், கொடுப்பதற்கு உரிய மரபினை உடையோர் தலைவியைக் கொடுக்க, திருமணச் சடங்கோடு பொருந்த அவளை மணந்துகொள்வதே ஆகும்.

இளம்பூரணர்

கரணம் என்பதை வதுவைச் சடங்கு என்பார்; தந்தை, தாய், தமையன்மார், மாமன், இவர் இல்லாதபோது சான்றோரும் தெய்வமும் கொடுப்பதற்கு உரியவர் என்பார். களவு வெளிப்பட்டோ வெளிப்படாமலோ கொடுக்கப் பெறலாம் எனவும் கூறுவார்.

நச்சினார்க்கினியர்

கரணத்தை வேள்விச் சடங்காகக் கொண்டு விளக்குவார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. What is called kaṟpu is when, joined with the rite,
  2. the hero of the lineage fit to take her takes the heroine
  3. as those of the lineage fit to give her give her away.

What the poem says

The first nūṟpā of Kaṟpiyal, the chapter on wedded life, defines kaṟpu. It is the taking of the heroine by the hero, with karaṇam, the marriage rite, when she is given by those who have the right to give her. The hero must be "of a line fit to take" her and the givers "of a line fit to give".

Iḷampūraṇar glosses karaṇam as the wedding ceremony (vatuvaic caṭaṅku). He takes "fit to take" as a man of equal or higher family, and the heroine as of equal or lower family; the givers are father and mother, brothers, the maternal uncle, and failing these the elders and even the god. He adds that such giving may come after the secret love has become known, while it is still hidden, or where the union was of minds only. Nacciṉārkkiṉiyar takes karaṇam as the Vedic sacrificial rite and explains kaṟpu as the order of life the hero is taught through it, a reading the commentators share in outline but frame differently.

உரை · Commentary

இளம்பூரணர்

இவ்வோத்து என்னபெயர்த்தோ வெனின், கற்பியல் என்னும் பெயர்த்து. கற்புக்கு இலக்கணம் உணர்த்தினமையாற் பெற்ற பெயர். கற்பென்பது யாதோவெனின், அஃதாமாறு இச்சூத்திரத்தில் விளங்கும்.

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின் கற்பிலக்கணம் கூறுதல் நுதலிற்று.

(இதன் பொருள்) கற்பென்று சொல்லப்படுவது, கரணத்தொடு பொருந்திக் கொள்ளுதற்குரிய மரபினையுடைய கிழவன் கொள்ளுதற்குரிய மரபினையுடைய கிழத்தியைக் கொடுத்தற்குரிய மரபினையுடையார் கொடுப்பக் கொள்வது என்றவாறு.

‘கொளற்குரி மரபின்’ என்பதனைக் ‘கிழத்தி’ என்பதனோடுங் கூட்டியுரைக்க.

களவின்கண் ஒத்தாரிருவர் வேட்கை மிகுதியாற் கூடி ஒழுகிய வழிக் கரணத்தின் அமையாது இல்லறம் நடத்தலாமோ எனின், அஃதாகாதென்றற்குக் ‘கரணமொடு புணர’ என்றார். கரணம் என்பது வதுவைச் சடங்கு. ‘கொளற்குரிய மரபிற் கிழவோன்’ என்றதனால் ஒத்தகுலத்தானும் என்று கொள்க. ‘கொளற்குரிய மரபிற் கிழத்தி’ யென்றதனால், ஒத்த குலத்தாளும் இழிந்த குலத்தாளும் என்று கொள்க. ‘கொடைக்குரிய மரபினோர்’ என்றதனால், தந்தையும் தாயும் தன்னையரும் மாதுலனும் இவரில்லாதவழிச் சான்றோரும் தெய்வமும் என்று கொள்க. கொடுப்பக் கொள்வது கற்பு என்றமையால், அது கொடுக்குங்கால், களவு வெளிப்பட்ட வழியும், களவு வெளிப்படாத வழியும், மெய்யுறு புணர்ச்சியின்றி உள்ளப்புணர்ச்சியான் உரிமை பூண்ட வழியும் கொள்ளப்பெறும் எனக்கொள்க. களவியற் சூத்திரத்துள்,

‘இன்பமும் பொருளு மறனு மென்றாங் கன்பொடு புணர்ந்த’ (களவியல். 1)

என்பதனைத் தந்துரைத்து, ஐந்திணை மருங்கிற் கற்பெனப்படுவது எனக் கூட்டுக.

அஃதேல், கொடுப்பக் கொள்வது கற்பாயின் பிரமம் முதலிய எண் வகையும் கொள்க. ‘கொடுப்போ ரின்றியும் கரண முண்டே— புணர்ந்துடன் போகிய காலை யான’ என்னும் இது கற்பாகுமோ எனின், அவையும் கற்பாதல் ஒக்குமேனும் கந்திருவம்போல ஒத்த அன்புடையார் ஆதல் ஒருதலையன்மையின் கைக்கிளை பெருந்திணைப்பாற்படும். ஈண்டு ஐந்திணை தழுவிய அகத்திணையே களவு கற்பு எனப் பகுத்தார் என்று கொள்க.

நச்சினார்க்கினியர்

என்பது சூத்திரம். இவ்வோத்துக் களவு கற்பென்னுங் கைகோளிரண்டினுட் கற்புணர்த்தினமையிற் கற்பியலென்னும் பெயர்த்தாயிற்று. கற்பியல் கற்பினது இயலென விரிக்க. இயல், இலக்கணம். அஃது ஆகுபெயரான் ஒத்திற்குப் பெயராயிற்று. அது கொண்டானிற் சிறந்த தெய்வம் இன்றெனவும், அவனை இன்னவாறே வழிபடுகவெனவும் இருமுதுகுரவர் கற்பித்தலானும், ‘அந்தணர்திறத்துஞ் சான்றோர் தேஎத்தும்’ ‘ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும்’ (தொல். பொ. 146) ஒழுகும் ஒழுக்கந் தலைமகன் கற்பித்தலானுங் கற்பாயிற்று. இனித் தலைவனுங் களவின்கண் ஓரையும் நாளுந் தீதென்று அதனைத் துறந்தொழுகினாற்போல ஒழுகாது ஒத்தினுங் கரணத்தினும் யாத்த சிறப்பிலக்கணங்களைக் கற்பித்துக்கொண்டு துறவறத்திற் செல்லுந் துணையும் இல்லற நிகழ்த்துதலிற் கற்பாயிற்று. களவு வெளிப்பட்ட பின்னராயினும் அது வெளிப்படாமையாயினும் உள்ளப் புணர்ச்சி நிகழ்ந்தவழியாயினும் வரைதல் அக் களவின் வழியாதலின் மேலதனோடு இயைபுடைத்தாயிற்று. இச்சூத்திரம் கற்பிற்கெல்லாம் பொது விலக்கணங் கூறுகின்றது.

(இ-ள்.) கற்பு எனப்படுவது—கற்பென்று சிறப்பித்துக் கூறப்படுவது; கரணமொடு புணர—வேள்விச் சடங்கோடே கூட; கொளற்கு உரி மரபிற் கிழவன்—ஒத்த குலத்தோனும் மிக்க குலத்தோனுமாகிக் கொள்ளுதற்குரிய முறைமையினையுடைய தலைவன்; கிழத்தியை—ஒத்த குலத்தாளும் இழிந்த குலத்தாளுமாகிய தலைவியை; கொடைக்கு உரி மரபினோர் கொடுப்ப-கொடுத்தற் குரிய முறைமையினையுடைய இருமுதுகுரவர் முதலாயினார் கொடுப்ப; கொள்வது—கோடற்றொழில் (எ-று.)

‘எனப்படுவது’ என்னும் பெயர் ‘கொள்வது’ என்னும் பெயர்ப் பயனிலை கொண்டது; இது சிறப்புணர்த்துதல் ‘அவ்வச் சொல்லிற்கு’ (தொல். சொல். இடை. 47) என்னுஞ் சூத்திரத்துட் கூறினான். ‘கொடுப்போ ரின்றியும்’ (தொல். பொ. 143) என மேல் வருகின்றதாகலின் இக் கற்புச் சிறத்தலிற் சிறந்ததென்றார். இஃது ‘என’ என்கின்ற எச்சமாதலிற் சொல்லளவே எஞ்சிநின்றது. இதனாற் கரணம் பிழைக்கில் மரணம் பயக்குமென்றார். அத் தொழிலின் நிகழுங்கால் இவளை இன்னவாறு பாதுகாப்பாயெனவும், இவற்கு இன்னவாறே நீ குற்றேவல் செய்தொழுகெனவும் அங்கியங்கடவுள் அறிகரியாக மந்திர வகையாற் கற்பிக்கப்படுதலின் அத் தொழிலைக் கற்பென்றார். தலைவன் பாதுகாவாது பரத்தைமை செய்து ஒழுகினும் பின்னர் அது கைவிட்டு இல்லறமே நிகழ்த்தித் துறவறத்தே செல்வனென்றுணர்க. இக் கற்புக்காரணமாகவே பின்னர் நிகழ்ந்த ஒழுகலாறெல்லாம் நிகழவேண்டுதலின் அவற்றையுங் கற்பென்று அடக்கினார். இருவரும் எதிர்ப்பட்ட ஞான்று தொடங்கி உழுவலன்பால் உரிமை செய்து ஒழுகலிற் கிழவனுங் கிழத்தியும் என்றார். தாயொடு பிறந்தாருந் தன்னையருந் தாயத்தாரும் ஆசானும் முதலியோர் கொடைக்குரியர் என்றற்கு மரபினோர் என்றார்.

உ-ம் : உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை (அகம். 86)

இதனுள் வதுவைக்கு ஏற்ற கரணங்கள் நிகழ்ந்தவாறும் தமர் கொடுத்தவாறும் காண்க. சுற்றஞ் சூழ்ந்து நிற்றலானுந் தமர் அறிய மணவறைச் சேறலானுங் களவாற் சுருங்கிநின்ற நாண் சிறந்தமையைப் பின்னர்த் தலைவன் வினாவ அவள் மறுமொழி கொடாது நின்றமையைத் தலைவன் தோழிக்குக் கூறியவாறு காண்க. இதனானே இது களவின்வழி நிகழ்ந்த கற்பாயிற்று.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṟpu eṉappaṭuvatu karaṇamoṭu puṇara
koḷaṟku uri marapiṉ kiḻavaṉ kiḻattiyai
koṭaikku uri marapiṉōr koṭuppa koḷvatuvē.