தொல்காப்பியம் 1087 · பொருள் 4.2

Section பொருளதிகாரம் / 4. கற்பியல்Poet தொல்காப்பியர்Lines 2

பாடல் · The poem

Tap a word to see where else it occurs.

1

பொருள் · Meaning in TamilAI

மகளைக் கொடுக்கும் உரிமையுடையோர் கொடுக்காதபோதும் திருமணச் சடங்கு உண்டு; அது தலைவனும் தலைவியும் கூடி உடன்போக்கில் சென்ற காலத்தில் நிகழும்.

இளம்பூரணர்

இதை முன் நூற்பாவுக்கு ஒரு புறனடை என்பார்; ஆகவே கற்புக்குக் கரணம் இன்றியமையாதது என்பது பெறப்படும். கொடுப்போர் இன்றிக் கரணம் நிகழ்ந்ததற்குக் குறுந்தொகைப் பாடலைச் சான்றாகக் காட்டுவார்.

நச்சினார்க்கினியர்

இளம்பூரணர் போலவே பொருள் கொள்வார்; அதே குறுந்தொகைப் பாடலைச் சான்றாகக் காட்டுவார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Even without givers, the rite exists,
  2. at the time when they have united and gone off together.

What the poem says

An exception to the previous rule. When the lovers have eloped (uṭaṉpōkku) without the consent of the heroine's kin, the marriage rite (karaṇam) still takes place, even though no one gives her away.

Iḷampūraṇar calls this a supplement to the previous nūṟpā: so the rite is constant in kaṟpu, and even where there are no givers there is no fault in conduct. He cites Kuṟuntokai 15, where the foster-mother tells the mother that the girl's love for a man of the wilderness has become as plain as the oath of the Kōcar of Nālūr, as an instance where the rite took place without givers. Nacciṉārkkiṉiyar agrees that the rite takes place there, adding that if the couple later return and are formally given, that falls under the previous rule.

உரை · Commentary

இளம்பூரணர்

இது மேலதற்கோர் புறனடை.

(இ-ள்) கொடுப்போரின்றியும், கரண நிகழ்ச்சி உண்டு; புணர்ந்துடன் போகிய காலத்து என்றவாறு.

எனவே கற்பிற்குக் கரண நிகழ்ச்சி ஒருதலையாயிற்று. இதனானே கொடுப்போ ரில்வழியும் கரணநிகழ்ச்சி யுண்மையும் ஒழுக்கக் குறைபாடு இன்மையும் கொள்க.

பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு தொன்மூ தாலத்துப் பொதியில் தோன்றிய நாலூர்க் கோசர் நன்மொழி போல வாயா இன்றே தோழி யாய்கழற் சேயிலை வெள்வேல் விடலையொடு தொகுவளை முன்கை மடந்தை நட்பே. (குறுந். ௧௫)

இதனுள் விடலையொடு மடந்தைநட்பு பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொண்டு நாலூர்க் கோசர் நன்மொழி போல வாயாயிற்று எனச் செவிலி நற்றாய்க்குக் கூறினமையானும், விடலை எனப் பாலை நிலத்திற்குரிய தலைவன் பெயர் கூறினமையானும் கொடுப்போரின்றியும் கரணம் நிகழ்ந்தவாறு காண்க.

நச்சினார்க்கினியர்

இஃது எய்தியதன்மேற் சிறப்பு விதி.

(இ-ள்.) கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே—முற்கூறிய கொடைக்குரிய மரபினோர் கொடுப்பக் கோடலின்றியுங் கரணம் உண்டாகும்; புணர்ந்து உடன் போகிய காலையான—புணர்ந்து உடன் போகிய காலத்திடத்து (எ-று).

இது புணர்ந்து உடன்போயினார் ஆண்டுக் கொடுப்போரின்றியும் வேள்வி யாசான் காட்டிய சடங்கின் வழியாற் கற்புப் பூண்டு வருவதும் ஆமென்றவாறு. இனி ஆண்டு வரையாது மீண்டுவந்து கொடுப்பக் கோடல் உளதேல் அது மேற்கூறிய தன்கண் அடங்கும் இனிப் போயவழிக் கற்புப் பூண்டலே கரணம் என்பாருமுளர். எனவே கற்பிற்குக் கரணம் ஒருதலையாயிற்று.

பறைபடப் பணிலம் ஆர்ப்ப … … மடந்தை நட்பே (குறுந். ௧௫)

இதனுள் ‘வாயாகின்று’ எனச் செவிலி நற்றாய்க்குக் கூறினமையானும் ‘விடலை’ யெனப் பாலை நிலத்துத் தலைவன் பெயர் கூறினமையானும் இது கொடுப்போரின்றிக் கரணம் நிகழ்ந்தது. “அருஞ்சுர மிறந்தவென் பெருந்தோட் குறுமகள்” (அகம் 195) என்பதும் அது.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1koṭuppōr iṉṟiyum karaṇam uṇṭē
puṇarntu uṭaṉ pōkiya kālaiyāṉa.