தொல்காப்பியம் 1088 · பொருள் 4.3
பாடல் · The poem
Tap a word to see where else it occurs.
பொருள் · Meaning in TamilAI
மேலோர் மூவருக்கும் வகுத்த திருமணச் சடங்கு, கீழோருக்கும் உரியதாகிய காலமும் உண்டு.
இளம்பூரணர்
மேலோர் மூவர் என்பதை அந்தணர், அரசர், வணிகர் எனவும், கீழோர் என்பதை வேளாளர் எனவும் கொள்வார்; முற்காலத்தில் கரணம் எல்லாருக்கும் பொதுவாக இருந்தது, பிற்காலத்தில் வேளாளருக்குத் தவிர்ந்தது போலும் என்பார்.
நச்சினார்க்கினியர்
இளம்பூரணர் கொண்ட அம்மூவரையே கொண்டு, முதல் ஊழியில் வேளாளருக்கும் உரியதாக இருந்தது என்பார்.
இதன் சமூகப் பொருள் பற்றிக் கருத்து வேறுபாடு உண்டு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The rite established for the three higher ones
- there was also a time when it became that of the lower.
What the poem says
Iḷampūraṇar takes "the three higher ones" as the three upper orders, brahmins, kings and merchants, and "the lower" as the vēḷāḷar, the cultivators. The rite established for the three also became theirs: in early times, he says, the rite was common to all, and it seems that in a later time it ceased for the vēḷāḷar. He refers the matter to those learned in the dharma texts.
Nacciṉārkkiṉiyar too reads the three as brahmins, kings and merchants, and the rite as that given for them in the Veda; he takes the line as saying that there was a time when it also belonged to the vēḷāḷar, by tantra and mantra, and that from the second age (ūḻi) it was withheld from them. The nūṟpā is short and its social reference is disputed; we follow the shared core, that a rite made for the three came to be used by the lower order as well.
உரை · Commentary
இளம்பூரணர்
இதுவுமது.
(இ-ள்.) மேற்குலத்தாராகிய அந்தணர் அரசர் வணிகர் என்னும் மூன்று வருணத்தார்க்கும் புணர்த்த கரணம் கீழோராகிய வேளாண்மாந்தர்க்கும் ஆகிய காலமும் உண்டு எ-று.
இதனாற் சொல்லியது, முற்காலத்துக்கரணம் பொதுப்பட நிகழ்தலின் எல்லார்க்கும் ஆம் என்பதும், பிற்காலத்து வேளாண்மாந்தர்க்குத் தவிர்ந்ததெனவுங் கூறியவாறு போலும். அஃதாமாறு தருமசாத்திரம் வல்லாரைக்கொண் டுணர்க.
நச்சினார்க்கினியர்
இது முதலூழியில் வேளாளர்க்கு உரியதோர் இலக்கணங் கூறுகின்றது.
(இ-ள்.) மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்-வேதநூல்தான் அந்தணர் அரசர் வணிகரென்னும் மூவர்க்கும் உரியவாகக் கூறிய கரணம்; கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டு-அந்தணர் முதலியோர்க்கும் மகட் கொடைக்குரிய வேளாண் மாந்தர்க்குந் தந்திர மந்திர வகையான் உரித்தாகிய காலமும் உள. (எ-று.)
எனவே, முற்காலத்து நான்கு வருணத்தார்க்குங் கரணம் ஒன்றாய் நிகழ்ந்தது என்பதாம். அஃது இரண்டாம் ஊழி தொடங்கி வேளாளர்க்குத் தவிர்ந்தது என்பதூஉந் தலைச்சங்கத்தாரும் முதனூலாசிரியர் கூறிய முறையே கரணம் ஒன்றாகச் செய்யுள் செய்தார் என்பதூஉங் கூறியவாறாயிற்று. உதாரணம் இக்காலத்திலின்று.